Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அரசாங்க அதிபர் தலைமையில், 'ஏற்றுமதி விவசா பயிரான இஞ்சி' அறுவடை விழா மட்டக்களப்பில்!

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதிப் விவசாயப் பயிர்ச் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஏற்றுமதி விவசா பயிரான இஞ்சி அறுவடை விழா (17) மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதிப் விவசாயப் பயிர்ச் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்றுமதி விவசாய திணைக்கள மட்டக்களப்பு  மாவட்ட விரிவாக்கல்  உத்தியோகத்தர் திருமதி நர்த்தனா குகதாசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான  ஏற்றுமதிப் பயிர்களின் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வு கிரான் பிரதேச செயலக பிரிவில் இடம் பெற்றது.
கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோரளங்கேணி பகுதியில் செய்கை பண்ணப்பட்ட இஞ்சி அறுவடை விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் ஏற்றுமதிப் பயிரான இஞ்சி அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.

சலோம் எஸ்டேட் ஒருங்கிணைந்த பண்ணையில் இடம் பெற்ற குறித்த அறுவடை நிகழ்விற்கு விசேட அதிதியாக கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் காசு சித்திரவேல் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கேமச்சந்திரிக்கா திருமால், கிராம உத்தியோகத்தர் நிர்மலா சுரேஸ்குமார், சலோம் எஸ்டேட் பண்னையின் மேற்பார்வையாளர் சுபாஸ் வின்சன்ட் தங்கராஜா, பண்ணையின் பிரதி மேற்பார்வையாளர்
தயாநிதி, கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்து வ பிரிவின் உத்தியோகத்தர் சிந்தம்பலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பண்ணையில் நடப்பட்டிருந்த ஏற்றுமதிப் பயிரான இஞ்சி அதிகமாக விளைந்திருந்ததுடன், அடுத்த வருடம் ஏற்றுமதி விவசாயவிவசாய திணைக்கள மட்டக்களப்பு  மாவட்ட விரிவாக்கல்  கிளையினால் மட்டக்களப்பில் நடுகை பண்னுவதற்கு உகந்த பயிர்கள் என கமுகு, கொறுக்காய், இஞ்சி, மிளகு, மஞ்சல் போன்ற பயிர் வகைகள் இனங்கானப்பட்டுள்ள நிலையில் அடுத்த வருடம் கோப்பி பயிர்ச் செய்கை
தொடர்பான அறிமுகம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.