Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரியாலை மயான புதைகுழி குறித்து அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை

.

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். 

அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ  கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாக பாகங்கள் கலக்கப்பட்டவையாக காட்சி தந்தது. 

இந்நிலையில் யாழ்ப்பாண நீதி மன்றம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இருப்பது நம்பிக்கை தரும் நிலையில், தேவை ஏற்படின் சர்வதேச தரத்திலான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் யுத்த கால உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோர மாட்டோம் உள்ளக விசாரணைகளே இடம்பெறும்  எனக் கூறி வரும்  நிலையில் குறித்த புதைகுழி யுத்த காலத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித எச்சங்களாக இருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம். 

ஆகவே தற்போதைய அரசாங்கத்திடம்  நாங்கள் கோரிக்கை முன்வைக்கிறோம் குறித்த மனிதப் புதை குழி தொடர்பில் நீதியான நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.