அமடு பகாயோகோவின் மரணம்: இசை இரசிகர்கள் அதிர்ச்சி!
பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் மாலி கலைஞர் இரட்டையர் அமடுவும் மரியமும் 'ஐ கேம் டு டெல் யூ தட் ஐ அம் லீவிங்' பாடலை நிகழ்த்தினர்.

அமடு பகயோகோ போய்விட்டார். புகழ்பெற்ற பார்வையற்ற இசைக்கலைஞர் இரட்டையர்களான அமடு அவர்களஅ மரியத்தை தனது மனைவியமக்கிக் கொண்டார். மாலி கலைஞரான அமடு தனது 70 வயதில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பமாகோவில் காலமானார் என்று அவரது குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 2024 இல் பாரிஸில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்த நிஜ வாழ்க்கை ஜோடி அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடத்தினர். ஒலிம்பிக் கொப்பரையின் அடிவாரத்தில் செர்ஜ் கெய்ன்ஸ்பர்க்கின் ' ஜெ சூயிஸ் வெனு தே டைர் கியூ ஜெ மெ'என் வைஸ்' பாடலை அவர்கள் வழங்கியிருந்தனர். பாராலிம்பிக் சுடரின் இறுதி அணைவுடன் இணைந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருந்தது.
மாலி கலாச்சார அமைச்சர் மாமோ டாஃபே அவர்கள் அமடு அவரது மரணத்தை உறுதிப்படுத்திஇ தனது 'திகைப்பை' வெளிப்படுத்தினார்.
மாலி ஜோடி 1998 ஆம் ஆண்டு Je Pense À Toi உடன் பிரான்சில் அறியப்பட்டது, பின்னர் 2004 ஆம் ஆண்டு Dimanche à Bamako ஆல்பம் (மற்றும் அதன் பல்லவி "sundays in Bamako are the wedding day " - 1980 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு ஒரு நிஜ வாழ்க்கை அனுபவம்) மூலம் சர்வதேச அளவில் மலர்ந்தது.
2010 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆல்பங்கள், ஏராளமான விருதுகள் மற்றும் அமெரிக்க கிராமி விருதுகளுக்கான பரிந்துரைகள், அமடு, மரியம் செப்டம்பர் மாதம் அவர்களின் சிறந்த ஆல்பமான லா வீ எஸ்ட் பெல்லேவையும் வெளியிட்டனர் .