Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜேவிபி வெளிப்படையாக பேசுகின்றது? ஜெனீவா தீர்மானத்தை ஜேவிபி நிராகரித்தது, சுனாமி பொது கட்டமைப்பை நீதிமன்றில் நீர்த்து போக செய்திருந்தது,போர்குற்றவாளிகளை தண்டிக்க மாட்டோம்!

.

ராஜபக்சே குடும்பத்தின் வெற்றியில் சக பிரயாணிகளாக ஜேவிபி! 

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை (A/HRC/57/L.1) ஜேவிபி அரசாங்கம் நிராகரித்தது குறித்து சிலர் சங்கடப்படுகின்றார்கள்

மேலும் திரு அனுர குமார திசாநாயக்க, திரு டில்வின் சில்வா, திரு விமல் ரத்நாயக்க போன்ற ஜேவிபி தலைவர்கள் இனவாதமற்றவர்கள் என்று நம்பும்  சிலருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்ஆனால் ஜேவிபி சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பதை புரிந்து கொள்ளுபவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.

உண்மையில் ராஜபக்சே குடும்பத்தின் வெற்றியில் சக பிரயாணிகளாக ஜேவிபி இருந்தது.

அதே போல ஜேவிபி யுத்த வெற்றி வாதத்திற்கு எதிரானவர்களும் அல்ல இதனால் தான் முப்படைக்கான சலுகைகளை குறைக்க மாட்டோம் என்று இப்போதும் ஜேவிபி வெளிப்படையாக பேசுகின்றது.

போர்குற்றவாளிகளை தண்டிக்க மாட்டோம் என்கின்றதுநல்லாட்சி காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கிய பதிலில் (Appendix 1 B) மாகாண ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஜேவிபி சார்பில் அனுர குமார திசாநாயக்க, திரு விமல் ரத்நாயக்க ஆகியோர் எடுத்தனர்.

மேலும் இது தவிர இதே ஜேவிபி திரு சுனில் ஹந்துநெத்தி மூலம் சுனாமி பொது கட்டமைப்பை (P-TOMS) நீதிமன்றில் நீர்த்து போக செய்திருந்தது இந்த சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை.

அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை.மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்பையே ஜேவிபி நிராகரித்ததிருந்தது.

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் கூட University of Edinburgh இல் சமர்ப்பித்த தனது PhD Dissertation இல் தெளிவாக “The party which managed two ideo-political currents of Marxism and Sinhala nationalism most adroitly was the JVP” என பதிவு செய்துள்ளார்ஆகவே ஜேவிபி தமிழர்களின் பிரச்சனைகளை நேர்மையாக ஒருபோதும் அணுகாது.

மேலும் இந்த அரசியல் உண்மைகளில் நாங்கள் தெளிவாக இருந்தால் தேவையற்ற ஏமாற்றங்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வராது என்பது குறிப்பிடத்தக்கது.