Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

12 மியன்மார் அகதிகளும் உறவினர்களுடன் இணைப்பு!

.

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று (07) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.