Breaking News
பாகிஸ்தானில் வெப்ப அலை : 568 பேர் பலி
.
பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 568 பேர் உயிரிழந்துள்ளனர்.பாகிஸ்தானில் வெப்பநிலை 49 – 50 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வசிப்பதற்கு வீடுகள் இல்லாதோர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களே அதிகளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.