Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் ; எஸ்.எம். மரிக்கார்

.

அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான  வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருள் மீதான 50 ரூபா வரியை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எரிபொருள் இறக்குமதி தரகுப்பணம் இன்றும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கா செல்கிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.

 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07)  நடைபெற்ற   மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024' தொடர்பான  சபை  ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் இன்றும் பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளார்கள். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  ஆட்சிக்கு வருவதற்கு பல  வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று அனைத்து வாக்குறுதிகளையும் மறந்து விட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024.08.19 ஆம் திகதி கல்கமுவ பகுதியில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், எரிபொருள் மீது முறையற்ற வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதிக்கு மேலதிகமாக 50 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் எரிபொருளின் விலை  அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சிக்கு வந்தவுடன் இந்த 50 ரூபா வரியை நீக்குவதாக குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்  வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. 

எரிபொருள் இறக்குமதியின் தரகுப்பணம் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு செல்வாக குற்றஞ்சாட்டப்பட்டது. இன்றும் அந்த தரகுப்பணம்  இன்றும் காஞ்சன விஜேசேகரவுக்கா ?  செல்கிறது  என்று கேட்கிறோம்.

வரிகளை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிலும் வரி அறவிடப்படுகிறது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரிக் கொள்கையையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார்.

அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான  வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக  வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு நிவாரமணிக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.