Breaking News
யாழில் பெண் வேட்பாளரை அவமதித்து அநாகரிகமாக நடந்து கொண்ட வைத்தியர் அர்ச்சுனா!
.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரை கடுமையாக தூற்றி அவரது துண்டறிக்கையை கைதுடைத்து கேலி செய்து மிகவும் அருவருக்கத்தக்க செயலைமருத்துவர் இரா. அருச்சுனா செய்துள்ளார்.
குறித்த இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு பெண் வேட்பாளரை மரியாதை இல்லாமல் வார்தைகளாலால் பேசியதுடன் அவரது துண்டு பிரசுரத்தை கிழித்து முகம் மற்றும் வாய் துடைத்து கேலி செய்தமை தொடர்பிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பெண் வேட்பாளரை அருவருக்கத்தக்க வகையில் நடத்திக்கொண்ட மருத்துவர் இரா.அருச்சுனாவின் செயலை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.