Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பருத்தித்துறை பகுதிகளில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக 40000 தண்டப்பணம்!

மீன்சந்தையில் மீன்வியாபாரம் செய்யும் போது வெற்றிலை மென்று பொதுவிடத்தில் எச்சில் உமிழ்ந்தவருக்கு 5000 தண்டப்பணம்.

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெற்றிலை மென்ற வண்ணம் உணவினை கையாண்டமை தொடர்பாக முகாமையாளர் மற்றும் உணவு கையாளுபவரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது  இன்றையதினம் விசாரணையின் பின்  (2025.08.22) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால்  40000 தண்டப்பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மீன்சந்தையில் மீன்வியாபாரம் செய்யும் போது வெற்றிலை மென்று பொதுவிடத்தில் எச்சில் உமிழ்ந்தவருக்கு 5000 தண்டப்பணமும் அறவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக  வல்வெட்டித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, உணவகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் தனிநபர் சுகாதாரம் பேணாமை, இலையான் பெருக இடமளித்தமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, உணவகத்தினை வதிவிடமாக பயன்படுத்தியமை, போன்ற குற்றச்சாட்டுகளிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது  இன்றையதினம் விசாரணையின் பின்  (2025.08.22) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு 25000 தண்டப்பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.