Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மனித உரிமை விடயத்தில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது. அமைச்சர் மேரி டிரெவல்யன்.

.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்படவேண்டும்.

மனித உரிமை விடயத்தில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது என பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுஐறயின் அவசியத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த பொறிமுறையும் சுயாதீனமானதாக அர்த்தபூர்வமானதாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் முன்னைய நிலைமாற்றுக்கால செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவும் பொறுப்புக்கூறலிற்கான பாதைகளை வழங்குவதாக காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.