Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

நல்லூர் பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச செயலர் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மதிப்பிற்குரிய கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் மதிப்பிற்குரிய  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பா.உ) மதிப்பிற்குரிய  இராமநாதன் அர்ச்சுனா (பா.உ) ஆகியோர் கலந்துகொண்ட னர்.

மேலும்  மாநகரசபை பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தரகள் என பலர் கலந்துகொண்L சிறப்பித்திருந்தனர்.

கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் சார்ந்த விடயங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், மேலும் பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல ஆக்கபூர்வமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.