Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தமிழர் பாராம்பரிய விளையாட்டை, ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் -கிளித்தட்டு போட்டி!

அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கம்!

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நடத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது நேற்றையதினம் இடம்பெற்றது

அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் தலைமையில்  கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கும் நோக்கோடு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அணிகளை உள்வாங்கி  ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.

ஆரம்ப போட்டியில் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 10 அணிகள் பங்குபற்றியுள்ளன.

 அதில் இருந்து மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களில் குறித்த  போட்டியானது ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் இடம்பெற்று ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படும் அணிகள் இறுதி போட்டிக்கு செல்ல இருக்கின்றது.

தொடர்ச்சியாக போட்டிகள் இடம்பெற்று, இறுதி போட்டியானது கரடிபிலவு, பழம்பாசி, ஒட்டிசுட்டான் பகுதியில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 28, 29 ஆம் திகதி இரு நாட்களும் தமிழர் பாரம்பரிய நிகழ்வுகளுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதலாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும், 

இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும், மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 30 ஆயிரம் ரூபா பணப்பரிசும் , வெற்றிக்கிண்ணமும், இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனுக்கான வெற்றி கிண்ணமும், தொடர் ஆட்ட நாயகனுக்கான வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.

ஆரம்ப போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொரு அணிக்கும் ஊக்குவிப்பு தொகையாக 10,000 ரூபா வழங்கப்படவுள்ளதாகவும், குறித்த போட்டியானது பாடசாலை மட்டங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். 

கிளித்தட்டினை ஊக்குவிக்கும் முகமாக மைதானம் புனரமைத்தல், அணிகளை ஊக்குவிக்க நிதிகளும் கையளிக்கப்பட இருக்கின்றது என அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் இதன்போது தெரிவித்திருந்தார்.