பிரதமர் பதவியை சஜித்துக்கு கொடுக்குமாறு கூறிய சுமந்திரன்
.
நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும், சஜித் பிரேமதாச அதனை
ஏற்காது ஓடி ஒளிந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தொம்பே பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு ரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் பேசுகையில்,
வவுனியாவில் ஆரம்பித்து கெகிராவ, சிலாபம் ஆகிய கூட்டங்களைமுடித்துவிட்டு தொம்பே வந்ததால் தாமதமாகிவிட்டது. அதனால் மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மக்கள் மழையில் நனைந்துகொண்டு காத்திருந்தீர்கள்.நீங்கள் நோய்வாய்ப்பட்டால் செப்டம்பர் 21 வாக்களிக்க முடியாமல் போகும்என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு பிரதமர் பதவியைவழங்க வேண்டும் என்று சுமந்திரன்
எம்.பி கூறினார். ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அநுரகுமார
கேட்கவே இல்லை. ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான்ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னோடு இருப்பவர்கள் எனக்கு ஆதரவளித்தால் நான் ஏற்றுக்கொண்டேன்.
வீட்டைக் கட்டுவதை போல படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்புவேன். அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது முதலீட்டு வலயமும் கிடைக்காது என்றார்.