யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-09.
.
1875 இல் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டபோது, 'யாழ்ப்பாண இளவரசர் வரவேற்புக் குழு ' ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் 10,000 இலங்கை ரூபாயை நிதியாகத் திரட்டினர். 1875 திசம்பர் 1 அன்று கொழும்பு வந்த வேல்ஸ் இளவரசருக்கு வழங்க ஒரு வெள்ளி கலசத்தையும் நகைகளையும் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. நிதியின் மீதி இருப்பு ரூ. 6,000-ஐ ஒரு நிரந்தர நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. ஜூலை 1, 1880 அன்று யாழ்ப்பாணக் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில், யாழ்ப்பாண எஸ்ப்ளேனேடில் ஒரு மணிக்கூட்டுக் கோபுரத்தை உருவாக்க இந்த நிதியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. கோபுரத்தை கட்ட கூடுதலாக 4,000 ரூபாய் உள்ளூர் பங்களிப்பிலிருந்து திரட்டப்பட்டது. இந்த கோபுரத்தை அரசாங்க கட்டிடக் கலைஞர் ஜே. ஜி. இசுமிதர் என்பவர் வடிவமைத்தார். கடிகாரத்தை ஆளுநர் ஜேம்ஸ் இலாங்டன் நன்கொடையாக வழங்கினார். கடிகார மணி 1882 தேதியிப்பட்டது.
1980களின் பிற்பகுதியில் உள்நாட்டுப் போரினால் கோபுரம் மோசமாக சேதமடைந்தது. வேல்சு இளவரசர் சார்லசு 1998இல் இலங்கைக்கு வந்தபோது, கோபுரத்தை மீட்டெடுப்பதில் பிரிட்டன் சார்பில் நிதியுதவியை வழங்கினார். பிரிட்ட்டன் அரசு ஒரு மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது. புதுப்பிக்கப்பட்ட கோபுரம் பிரித்தன் உயர் ஸ்தானிகர் லிண்டா டஃபீல்டால் 19 ஜூன் 2002 அன்று மீண்டும் திறந்து வந்தார்.
1880 சனவரி 4 அமெரிக்கமிசனைச் சேர்ந்த மேரி, மாக்கிறட் வெட்ச் சகோதரிகள் மரணமானார். உடுப்பிட்டியை வந்தடைந்தனர்.
சனவரி 24 ஆயர் பொன் யோன் அவர்கள் மார்செயிலில் வைத்து வண பிதா அன்று மெரின் அவர்களை இணை ஆயராக திருநிலைப்படுத்தினார்.
சனவரி 28 சேர் ஜேம்ஸ் லொங்டன் இரண்டாவது தடவையாக தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்தார். ஒரு கவர்ணருடன் சேர்ந்து அவருடைய மனைவி யாழ்ப்பாணம் வந்தது இதுவே முதல் தடவை ஆகும்.
பெப்ரவரி 2 யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் தபால் வண்டிச்சேவை யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த திரு.ஞானமுத்துவினால் ஆரம்பிக்கப்பட்டது.
பெப்ரவரி 3 தனது நிர்வாகத்திற்கெதிராக விமர்சித்து எழுதியதற்கு எதிராக சிலோன் எக்சாமினர் பத்திரிகை ஆசிரியர் லுடோக்சிக்கு எதிராக, யாழ்மாவட்ட நீதிபதி திரு.டி.சேரம் முன்னிலையில் திரு.வில்லியம் ருவைனம் மானநஸ்ட வழக்கு பதிவு செய்தார். உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில் 1000 ரூபா குற்றப்பணம் திரு.லுடோவிச்சுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிபதி சேர் றிச்சாட் கென்றி இத்தீர்ப்பினை வழங்கினார்.
ஏப்ரல் 1 மன்னாரில் முத்துக்குளித்தல் நிலையம் 130,000 ரூபா பணமீட்டியது.
ஏப்ரல் 22 திருவாங்கூர் மேல் நீதிமன்ற மேல் நீதிபதி அரியநாயகம் பிள்ளையின் மாமானார் சங்கரப்பிள்ளைன முதலியார் காலமானார்.
யூன் யாழ்ப்பாண வர்த்தக கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கச்சேரியின் முதன் முதலியாரும் கவர்னர் நிர்வாக முதலியாராகவும் இருந்த சவிரிமுத்து முதலியாருக்கு சென் கிறகறியின் செவலியர் விருது ஆயர் பொன் ஜோன் அவர்களின் சிபாரிசினால் வழங்கப்பட்டது.
யூலை 2 வேல்ஸ் இளவரசரின் வரவேற்ப்புக்கு சேகரிக்கப்பட்ட பணத்தில் எஞ்சியதை கொண்டு யாழ்ப்பாண மணிக்கூட்டுக்கோபுரம் கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது.
யூலை முதலாவது மின்சார ரெலிபோன் சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
செப். 10 தென்னை பெரும் தோட்டதுரை திரு.டேவிட் ரொட் தோட்டம் முதல் வருத்தம் காரணமாக மரணமானார். இவர் யாழ்ப்பாண பொலிஸ் நீதவானாகவும் அமெரிக்க விசா அதிகாரியாகவும் சமாதான நீதவானாகவும் செயற்பட்டார்.
செப்டம்பர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பையா முதலியாரால் 30,000ரூபா செலவில் ஓர் தர்ம சத்திரம் சைவ யாத்திரிகளுக்காக கட்டப்பட்டது.
ஒக்டோபர் 1 இந்தியாவுடன் மணி ஓடர் முறை ஆரம்பிக்கப்பட்டது.
நவம்பர் யாழ்ப்பாணக் கச்சேரி கிளார்க் எஸ் மேர்வின் 35 ஆண்டுகால சேவையின் பின் ஓய்வு பெற்றார்.
டிசம்பர் 1 இரத்த போக்கு காரணமாக, பிரிட்டிஸ் இந்தியா நீராவிக்கப்பல் கம்பனி யாழ்ப்பாண முகவர், திரு.சந்திரசேகரர் காலமானார்.
1880 டிசம்பர் 5 ஆயர் மெலிசான் வண பிதாக்கள் தியரி, யூலான், லாபார்ச் ஆகியோருடன் ஐரோப்பாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார்.
டிசம்பர் 12 20 குருமார், 2 துணை முதல்வர்கள் உதவியுடன் ஆயர் பொன் ஜோன் வண. சகோதரர்கள் இசர்விட், ஜோன் அலோசியஸ், சார்ள்ஸ் கொலின் ஆகியோரை குருமாராகவும், சகோதரர்கள் ஜோன்டென் யூர்ஸ் பொலின் ஆகியோரை கோவில்
அதிகாரிகளாகவும் சகோதரர் சிமித் உதவி கோவில் அதிகாரியாகவும், சகோதரர்கள் ஸரவுரர் மேர்பி ஆகியோரைஎவாயில்
காப்போராகவும், சகோதரர்கள் நோயர், கிர்பி ஆகியோரை லிகிதர்களாவும் திருநிலைப்படுத்தினார்.
டிசம்பர் மன்னார் மாவட்டத்தில் நீர்ப்பாசணம் குறித்து சுவாரசியமான அறிக்கை திரு.கென்றி பாக்கரால் வெளியிடப்படடது.
டிசம்பர் 21 கொழும்புத்துறையில் இலங்கையின் முதலாவது புனளித பத்திரிசியார் ஆலயம் கட்டப்பட்டது. ஓர் ஜரிஸ்காரின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட இக்கோயில் ஆயர் பொன் ஜோனால் ஆசீர்வதிக்கப்பட்டது. இது இடிந்து வீழ்ந்துபோக இதன்மேல் புனிதமாதா கோயில் தற்போது கட்டப்பட்டது.
1881 சனவரி 1 இலங்கை அங்கிரிக்கன் மிசன் இங்கிலாந்திலிருந்து அங்கினிக்கன் சபையிலிருந்து விடுபட்டு தனியாக இயங்கும் என காலனித்துவ செயலாளரிடமிருந்து கவர்னர் லோங்டன்ற்கு செய்தி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது பொறுப்பிலிருப்
பவர்களுக்காக சம்பளம் அடுத்த 5 வருடங்களுக்கு அரசு வழங்குமென அறிவிக்க்பட்டது.
சனவர் 10 ஆயர் பொன் ஜோன் அவர்களால் யாழ் புனித பத்திரியார் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவருக்கு உதவியாக துணை ஆயர் மெலிசான் இருமுதல்வர்கள் டிலசானி, புலாகோ ஆகியோர் பங்கேற்றனர். மிகவும் சிறந்த உரையை ஆயர் பொன் ஜோன் அவர்கள் ஆற்றினார்.
சனவரி 25 துணை ஆயர் டாக்டர் மெலிசானின் ஆண்டு நிறைவு விழா வடக்கு கிழக்கு மாகாண மக்களின் சார்பில் மிகவும் அழகான விலை மதிப்பான மேலங்கியை சவிரிமுத்து முதலியார் வழங்கினார்.
பெப்ரவரி 6 சவரிமுத்து முதலியாருக்கு செவாலியர் விருது அழிக்கப்பட்டதற்காக புனித மரியாள் பேராலயத்தில் ஆயர் பொன் ஜோன் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதன்போது பாப்பாண்டவர் 13ம் லியோ அவர்கள் சவரிமுத்து முதலியாருக்கு வழங்கிய பட்டயத்தின் சுருக்கம் அங்கு குழுமியிருந்த பெரும்பாலான மக்கள் மத்தியில் வாசிக்கப்பட்டது.
பெப்ரவரி 17 2வது குடிசனத்தொகை இலங்கைத்தீவில் கணக்கிடப்பட்டது. இலங்கையின் மொத்த சனத்தொகை 27,59,738 ஆகும். வடமாகாண சனத்தொகை 302,500 ஆகும். யாழ்ப்பாண சனத்தொகை 40,067 ஆகும்.
1881 ஜே ஆர் ஆர்னோல்ட் யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் பேராசிரியாக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 1 அரிப்புவில் உள்ள முத்துக்குளித்தல் நிலையம் 599,533 ரூபா பணமீட்டியது.
டிசம்பர் 3 புனித பத்திரிசியார் கல்லூரிக்கு மிகப் பெரிய மண்டபத்திற்கான அத்திவாரம் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் ஆயர் பொன் ஜோனால் இடப்பட்டது.
1881 டிசம்பர் 31 மிகப்பெரிய பூமி அதிர்ச்சி இலங்கைத்தீவு பூராவும் உணரப்பட்டது.
1882 சனவரி 25 வேல்ஸ் இளவரசர்களான அல்பேட் விக்டர், ஜோர்ச் ஆகியோர் இலங்கை வந்தனர்.
பெப்ரவரி மிகவும் பழமை வாய்ந்த பெரிய குளமான மின்னேரியாக் குளத்தினதும் அதன் வரலாறு பற்றியதுமான அறிக்கை எச்.பாக்கரால் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாண ஆலய சபையின் பொறுப்பை வண. க. கிறிப்பித் எடுத்துக்கொண்டார்.
யூன் வடபகுதி மாவட்டங்கள் விவசாயம் பெருந்தோட்டம் வேட்டையாடல் போன்ற துறைகளில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தன.
யூலை 31 யாழ்ப்பாணக்கச்சேரி யில் நெல் இலாகாவின் பிரதம கணக்காளர் ஜோசப் முதலியார் மரணமானார்.
செப்டம்பர் 25 கொழும்பில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதலியார் என் தம்பையாவிற்கென, இங்கிலாந்தில் கட்டப்பட்ட எஸ் எல் லேடி லோங்டன் எனப்படும் கப்பல், இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் சேவை வழங்க கொழும்பு வந்து சேர்ந்தது.
ஒக்டோபர் 4 புனித கிறகறியின் செவாலியர் விருது பெற்ற யாழ்ப்பாணக் கச்சேரியின் பிரதம முதலியார், சந்திரசேகர சவரிமுத்து முதலியார் மரணமானார்.
செப்டம்பர் 26 அமெரிக்க மிசனில் ஆரம்பத்தில் இணைந்த நாத்தானியேல் நைல்ஸ் எனப்படும் பிரசங்கியார் மரணமானார்.
டிசம்பர் 1 போல் முதலியார் யாழ்ப்பாணக்கச்சேரியின் பிரதம முதலியாராக நியமிக்கப்பட்டார்.
டிசம்பர் 26 இடிமுழக்கத்துடனான பெரும் புயற்க்காற்று யாழ்ப்பாணம், மன்னார் உள்பட இலங்கைபூராவும் கடுமையாக வீசிற்று.
1883 ஏப்ரல் 10 ஆயர் பொன் ஜோன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஆயராக மாற்றப்பட்டார்.இவரின் இடத்திற்கு யாழ்ப்பாணத்
தின் துணை ஆயர் மெலிசான் ஆயராக நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் 15 எஸ் எஸ் லேடி லோங்டன் கப்பல் சிங்கப்பூரில் உள்ள ஒரு கம்பனிக்கு அதன் உரிமையாளரால் விற்கப்பட்டது.
மே முதலாவது றிக்சோ வண்டி வைற்றோல்; அன் கோவால் முதன் முதலில் இறக்குமதி செய்யப்பட்டது.
யூலை 14 யாழ்ப்பாண அமெரிக்க மிசனை சேர்ந்த அமெரிக்கரான செல்வி அக்னியு 77வது வயதில் மானிப்பாயில் இறந்தார். இவர் 43 வருடம் இலங்கையில் சீவித்தார்.
1883 யூலை 10 சேர் ஜோன் டக்லஸ் பதில் கவர்னராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஓகஸ்ட் 2 ஆலய சபையின் சுதேச பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. வன்னி பளை பகுதிகளில் சமயம் பரப்புவதற்கு தேவையான நிதியை திரட்டுவதே அதன் நோக்கமாகும். தீவுப்பகுதிகளில் ஆயரில்லத்தில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
ஆகஸ்ட் யாழ்ப்பாணம், மல்லாகம் நீதி மன்றங்களின் மொழிபெயர்ப்பாளரும் செயலாளருமான குமாரகுலசிங்க முதலியார் காலமானார்.
ஆகஸ்ட் கட்டிமுடிக்கப்படாமலிருந்த யாழ்ப்பாண பேராலயத்தின் சுற்று மதிலை உதவி காட்டு இலாகா அதிகாரியான எம்.எதிர்மனசிங் கட்டி முடித்தார்.
டிசம்பர் 3 சேர் ஆதர் கமில்ரன் இலங்கை வந்து கவர்னராக பதவியேற்றார். ஸ்ரோர் தம்பர் எனப்படும் நிக்கலாஸ் புவிராசசிங்கி முதலியார் காலமானார்.
1884 மார்ச் நாகநாதர் முதலியார் மரணமானார். இவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் மொழிபெயர்பாளராக வேலை செய்தார்.
மார்ச் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் பாவிப்பதற்கென முத்தி செய்வதற்கு ஓர் நல்ல சிலுவையை காடடு இலாகா உதவியாளர் எதிர்மனசிங்கம் யாழ் பேராலயத்திற்கு வழங்கினார்.
மார்ச் சிலாவத்துறையில் ஓர் முத்துக்குளித்தல் நிலையம் 15,686 ரூபா பணமீட்டியது. இந்திய பிராந்திய சபையை சேர்ந்த அதி வண ஈ ஏ கொப்ன்ஸ்ரேன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
ஏப்ரல் 26 யாழ்ப்பாணக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ராங் சான்டேர்ஸ் யாழ்ப்பாணத்தில் முதலாவது வை.எம்.சி.ஏயை ஆரம்பித்து வைத்தார்.
மே 3 ஒறியன்நல வங்கி கூட்டுத்தாபனம் திவாலானது கவர்னர் கோர்டன் ஒரியன்ரல் வங்கிக்கு மாற்றாக புதியவங்கி ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார்.
மே 28 யாழ்ப்பாணத்தில் அமெரிக்க வைத்திய சபையுடன் இணைந்து பெரும் வைத்திய பங்காற்றிய டாக்டர் கிறின் அமெரிக்காவில் மரணமானார். யாழ்ப்பாணத்தில் பெரும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
யூலை தபால் அதிபர் வைமன் கதிரவேற்பிள்ளையின் சகோதரர் சபாபதி முதலியார் ஊ;காவற்துறையில் மரணமானார். இவர் வருமான வரி அதிகாரியாவார்.
யூலை கவர்னர் கோர்ட்டன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
சென்னை உயர் நீதி;மன்ற வழக்கறிஞர் பி.சவுந்தரநாயகம்பிள்ளை மரணமானார்.
யூலை 21 யாழ்ப்பாண அரச அதிபர் ருவைனாம் கவர்னரால் சி.எம்.ஜி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் பெரும் கலைஞரான தம்பையா முதலியார் கொழும்பில் காலமானார்.
செப்டம்பர் 5 முதலாவது ஆலய சபை போதகர் ஜோன் கென்ஸ்மான் மரணமானார்.
செப்டம்பர் யாழ்ப்பாணம் சென் ஜோசப் கத்தோலிக்க வாசிகசாலை திறக்கப்பட்டது.
ஒக்டபர் 16 யாழ்ப்பாணத்தில் சூறாவளிக்காற்று பெரும் அழிவை ஏற்படுத்தியது. பெரும் காற்று, மழையால் பல வயல்கள் வெள்ளத்தால் நிரம்பின மரங்கள் வேரோடு சாய்ந்தன. தந்திக்கம்பிகள் அறுந்து தூண்கள் வீழ்ந்து போயின.
ஒக்டபர் வருமானம் குறைந்துபோனதால், தபால், சுங்கவரிகள் அதிகரிக்கப்பட்டன.
டிசம்பர் 14 பலத்த புயற்க்காற்;று இலங்கை பூராவும் வீசிற்று. யாழ்ப்பாணத்தில் பலத்த உயிர்ச்சேதமும் பொருட்சேதமும்
உண்டாயிற்று.
டிசம்பர் 27 மத்தியு பிலிப்ஸ் 90வது வயதில் இறந்து போனார். உடுவிலில் முதாலாவது கிறிஸ்தவ பிராத்தனை சபை உருவாகிற்று.
1885 சனவரி 31 இலங்கை அரசின் புதிய கரன்சி நோட்டுகள் பழக்கத்திற்கு விடப்பட்டன.
பெப்ரவரி 16 தமயந்தி விலாசம், மாணிக்கவாசகர் விலாசம் ஆகிய படைப்புக்களை தந்த கவிஞரும் கல்விமானுமாகிய இராமலிங்கம் காலமானார். இவரது மூதாதையர்கள் மூன்று தலைமுறையாக அரச உடையார்களாக சேவைசெய்தாபர்கள்
மார்ச் 29 27 வருடங்களாக யாழ்ப்பாண ஆண்கள் குருமடத்தில் சேவையாற்றிய வண. பிரவுண் அடிகளார் மரணமானார்.
1885 சனவரி 31 தமிழ், சிங்கள, இஸ்லாமிய புதுவருடத்தை அனுஷ்டிப்பதற்கு, அரசு அதை விடுமுறை நாளாக அறிவித்தது. ஏப்ரல் 16 தபால் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1885 மே 20 சென் பற்றிக் கல்லுரியில் திரு இருதய சகோதர சபையின் பொதுக்கூட்டம் நடந்தது. 'கடமை' என்னும் தலைப்பில் ஜேம்ஸ் மார்ட்டின் உரை நிகழ்த்தினார்.
யூன் 10 சேர் ஆங்தர் கோர்டன் இங்கிலாந்து சென்றார்.
யூன் 20 சேர் ஜோன் மக்கியோட் அரசை நிர்வகிக்கும் அதிகாரியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
யூலை 1 ஒரு வகை தொற்றுக்காய்ச்சல் 1885 முதல் பகுதியில் சில மாவட்டங்களில் பரவிற்று. யாழ்ப்பாணத்தில் 1868 பேர் பாதிக்கப்பட்டனர்.
யூலை 18 இந்திய, காலனித்துவ கண்காட்சிக்கு இலங்கை சார்பில் தகுதியான, திருப்திகரமான ஒரு பிரநிதித்துவத்தை அமைப்பது பற்றி, கொழும்பில் உள்ள தலைமைக்குழுவிற்கு உதவியாக, ஒரு கலந்தாலோசனைக்கூட்டம் யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது.
யூலை 21 களிப்பூட்டும் நிகழ்ச்சிக்காரரான அமெரிக்கர் வாட்சன் யாழ்ப்பாணத்தில் ஓர் நிகழ்ச்சி நடத்தினார்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -