Breaking News
ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியாவிற்கு பயணம்!
.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது.
ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கிய சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.