Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் மக்கள் புலிகளை நினைவு கூருவதும்; ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை

.

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும்,  ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது.

இரண்டு ஆயுதப்போராட்டங்களும் அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டன.இரண்டு ஆயுதப்போராட்டங்களும் நியாயபூர்வமானவை.

மக்கள் ஏன் ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கான நியாயபூர்வமான காரணங்கள் உள்ளன.

அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம், ஆனால் இந்தநியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் ஒரு தரப்பை தடைகள் இன்றி செயற்படவும் நினைவுகூரல்களில் ஈடுபடவும் அனுமதிப்பதும்,ஏனைய தரப்பின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நியாயமான விடயம் என நான் கருதவில்லை.

நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை.

உங்கள் அரசாங்கம் இனவாத அரசாங்கம் என குறிப்பிடும் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சுற்றிக்கை வெளியானது.

அந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட நீங்கள் எப்படி நினைவுகூரல்களை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கும் சுற்றுநிரூபத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது அது முற்றாக நியாயமற்ற விடயம்.

இந்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் பயன்படுத்தக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.