Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து மேலும் பல தகவல்கள் எங்களிடம் உள்ளன – நாடாளுமன்றில் சாணக்கியன்

.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து அரசாங்கம் தீவிரவிசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பெரும் பொறுப்புள்ளது பிள்ளையான் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்இஇதற்கு அப்பால் நீங்கள் யாரை கைதுசெய்யவேண்டும் என நாங்கள் உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை இ இது பொலிஸாரிற்குரிய விடயம்இஎனினும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து எங்களிடம் மேலும் பல தகவல்கள் உள்ளன.

நான் பாதுகாப்பு செயலாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன்.பாதுகாப்பு அமைச்சரும் இங்கிருக்கின்றார்எங்களிற்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.

நாங்கள் திரிபோலி பட்டாலியன் குறித்து பல விடயங்களை நாடாளுமன்றத்தில் விவாதித்துள்ளோம்.மேலும் ஆதாரங்களை பெறுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்.