Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அரசியல் தீர்வு தொடர்பில் சுவிஸ் அதிகாரிகள் பேச்சு!

.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சுவிஸ் அரசின் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பிலும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அரசுடன் நடைபெறக்கூடிய பேச்சுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் சுவிஸ் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிச் செயலாளரும், சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான ரிம் எண்டர்லின், இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வோல்ற், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் மனிதப் பாதுகாப் புக்கான முதன்மைச் செயலாளர் ஜெஸ்ரின் பொய்லற், சுவிஸ் தூதரகத்தின் மூத்த தேசிய திட்ட அதிகாரி சுசந்தி கோபாலகிருஷ்ணன் உள்ளடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டனர்.