Breaking News
அங்கிகரிக்கப்படாத நாடுகளுக்கான “உலக மகளீர்”உதைபந்தாட்டப்போட்டியில் முதல் தடவை பங்குபற்றிய…. “தமிழீழ”அணி . தீர்ப்பு 2:1 என்றானது.
இறுதிவரை உறுதியோடு ஆடுகளத்தை நிறைத்தார்கள் எங்கள் வீரங்கனைகள் …
அங்கிகரிக்கப்படாத நாடுகளுக்கான “உலக மகளீர்”உதைபந்தாட்டப்போட்டியில் முதல் தடவை பங்குபற்றிய….
“தமிழீழ”அணி இரண்டாமிடம் வென்றது…
நாங்கள் வெற்றிக்காக மட்டும் களத்தைப் பயன்படுத்துவதில்லை…… இழந்த எங்கள் இறைமையை மீட்டெடுப்பதற்காக களங்களைப் பயன்படுத்துபவர்கள்….. தீராத தாகம் இன்னமும்-எங்கள் ஆழ்மனங்களில் அப்படியே இருக்கிறது…….. மீளாத சோகங்கள் எங்கள் நாடி,நரம்புகளில் புரையோடிப்போயுள்ளது… எதிரணியினர் வெற்றியை மட்டுமே பெறுவார்கள் ஆனால் நாம் பெற்ற/பெறும் வெற்றிகளுக்குப் பின்னால் வலியும்,வேதனையும் எப்போதும் கூடவே இருக்கும்……. பெற்ற வெற்றிகள் பல்லாயிரம்…. ஆனால் அத்தனையும் நாம் தோல்வியில் பெற்ற பயிற்சியும்,விடாமுயற்சியும் தந்த பலன்களே….! வென்றால் இலகுவில் அதன் தன்மை புரியாது…. தோற்று பின் வென்றால் அந்த வெற்றிக்கனியின் சுவை வேறுதரம்…! எமது பிள்ளைகள் களத்தை சரியாகப் பயன்படுத்தினர்….. சளைக்காது களமாடினர்…. இறுதியில் எமக்கான தனித்துவத்தை நிறுவி ஆடுகளம் விட்டகன்றனர்….. அடுத்தமுறை இன்னும் அதிக அனுபவத்தோடும், பயிற்சி,தந்திரம், விடாமுயற்சியோடு வருவார்கள்.