Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்!

.

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவான நிலையில் மொத்தமாக 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.