நான் வாய்ச்சொல் தலைவர் அல்ல: சஜித்
.
”கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்கரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவர்களை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரமுடைய மூடையை 5000 ரூபாவிற்கும், கிருமி நாசினிகளையும், கலைக் கொல்லிகளையும் நியாயமான விலைக்கு வழங்குவோம்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதவச்சிய நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
QR CODE முறையில் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சாரதிகளுக்கும், சக்தி திட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.
விவசாயிகளின் உற்பத்திகளுக்கும், நெல்லுக்கும் நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, நுகர்வோரையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த நாட்டில் உள்ள அரிசி மாபியாக்கள் விவசாயிகளை அசெளவுகரியத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரிசி மாபியாவுக்கு தடைவிதித்து, விவசாயிகளை ஆட்சி பீடம் ஏற்றுவோம்.
துன்பத்தில் இருக்கின்ற விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாய கடன் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் விவசாய கடன்களை முழுமையாக இரத்து செய்வோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம், மூச்சு போன்ற செயற்பாட்டின் ஊடாக ஒரு பில்லியன் பெருமதியான வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
அரசாங்கம் கோடீஸ்வரர்கள் செல்வந்தர்களதும் கடன்களை இரத்து செய்துள்ளது. விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய முடியாமல் போயுள்ளது.
விவசாயிகள் ஒவ்வொரு போகத்திலும் வேளாண்மை செய்கின்ற போது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சிக்கின்றது. எனவே விவசாயிகளின் உற்பத்திகளை பாதுகாத்து அவற்றுக்கு நிர்ணய விலை ஒன்றை வழங்கி முறையான விற்பனை விலையை பெற்றுக் கொடுப்போம்.
தற்போதைய அரசாங்கமும் மாற்று அரசியல் சக்திகளும் இந்த விவசாயிகளை சுமையாக கருதுகின்றனர். கமநல சேவை மத்திய நிலையங்களை தீக்கிரையாக்கியவர்களால் விவசாயிகளை வளப்படுத்த முடியாது.
ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தின் பால் விவசாயிகளை ஈடுபடுத்தி, டிஜிட்டல் முறைப்படி பூரணப்படுத்தப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்.
விவசாயிகளுக்கு செய்ய முடியுமான அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி அதை இந்த மண்ணின் யதார்த்தமாக மாற்றுவோம்.
அரச மற்றும் தனியார் தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவோம். பட்டதாரிகளின் தகுதி மற்றும் விருப்பம் என்பனவற்றிற்கு அமைய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். நான் வாய்ச்சொல் தலைவர் அல்ல. மாறாக செயலில் செய்துகாட்டியவன்.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.