மனோ அக்கா விருது 2025! “பிராங்கோ - தமிழ் பொது அறிவிப் போட்டி”
எமது இனத்திற்கான சேவைகள் தொடர வேண்டும் என்பதற்காக...

மனோ அக்கா விருது 2025
மனோ அக்கா எனும் மகத்தான தாய், எமை எல்லாம் விட்டுப் பிரிந்து சென்ற நாள். 13,03,2021. காதல், கருணை, கண்டிப்புஎன அனைத்தையும் எம்மிடம் காட்டியவர், எமக்குக் கற்றும் கொடுத்தவர். தலை வலித்தாலும், மனம் வலித்தாலும் நாம் தேடியஒரே உறவு மனோ அக்கா தான். இன்று அருகில் இல்லை என்றாலும்இ அவர் நினைவுகள் எம்முள் நிலைத்து நிற்கும்.
பிரான்சில் விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேத்தவரும், சமூக செயல்பாட்டாளருமான மனோ அக்காவின் நான்காம் ஆண்டுநினைவாக பொது அறிவுப் போட்டி ஒன்று பிரான் தொர்சி என்னும் நகரில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் நீண்ட காலமாக வசித்து வந்த திரு.மதிமனோகரன், மனோ அக்கா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம்சேர்கும் பல வேலைத் திட்டங்களை செய்துவந்ததுள்ளதுடன் பல சமூக நல வேலை திட்டங்களையும் செய்து வந்துள்ளhர். தமிழீழ விடுதலைப் புலிகளின்பெண்கள் அமைப்பை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்ட வரும் மேலும் வேறு சில நாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பு உருவாகுவதற்கு காரணமாகவும் இருந்து வந்துள்ளார். பிரான்சில் பல இன்னல்களுக்கு மத்தியில் தன்னால் இயலக்கூடிய பணிகளை செய்து வந்த போதிலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி சுகயீனம்காரணமாக இயற்கையெய்தியிருந்தார்.
கல்வி கல்வி அபிவிருத்தி நிறுவனம்.
தொர்சி நகரில் செயற்படும் கல்வி. கல்வி அபிவிருத்தி நிறுவனம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, கல்வி உதவி, இருப்பிட உதவி, வாழ்வாதார உதவி போன்ற தன்னாலான உதவிகளை செய்து வருகின்றது.மேலும் தொர்ச்சியில் அந்திமந்தாரை என்னும் நிகழ்வின் ஊடாக வயோதிபர்களை அழைத்து அவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வுகளையும், அவர்களோடு உரையாடும் நிகழ்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது, இந் நிறுவனத்தோடு மனோகஅவர்களும் பயணித்துள்ளார் என்பது சிறப்பு.
இந்த நிறுவனமானது மனோக்காவின் சமூக செயல்பாடுகளையும், அவர் ஆற்றிய செயல்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்அதை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையிலும் எமது இனத்திற்கான சேவைகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் அவருடைய நினைவினை முன்வைத்து அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவில் கவிதைப் போட்டிஒன்றை நடத்தி அதில் ' மனோ அக்கா விருது 2022' என்னும் மதிப்புக்குரிய விருதினை வழங்கி ஊக்குவித்தது.
இரண்டாம் ஆண்டில் ஓவியப் போட்டி ஒன்றினை நடத்தி அதிலும் முதலாம் இரண்டாம் மூன்றாம் வெற்றியாளர்ளைத் தெரிவுசெய்து பரிசுகளை வழங்கியதோடு மனோ அக்கா விருது 2024 எனும் விருதினை வழங்கி போட்டியாளர்களை ஊக்குவித்தது. இதில் ஓவியர் திரு. சந்திரன், ஓவியர் திரு.தயா அவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
மனோ அக்கா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில், மூன்றாவது தடவையாக 16, 03, 2005 அன்று 'பிராங்கோ தமிழ் பொது அறிவிப் போட்டி' ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கு கொள்ளக்கூடிய போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேள்விகள் தமிழிலும் பிரஞ்சு மொழியிலும் வழங்கப்பட்டு திரையினில் காண்பிக்கப்பட்.டது.
போட்டியாளர்கள் தங்கள் கைத்தொலைபேசி மூலமாக பதில்களை வழங்கக்கூடிய வகையிலும், போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் உடனுக்குடன் யார் யார் முன்னணியில் உள்ளனர் என்பதை திரையில் பார்க்கக் கூடியதாகவும் ஏற்பாடுசெய்தனர். அதில் 40 கேள்விகள் வழங்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் மூன்றாவது வெற்றியாளராக திரு.ராசாகிளி இளவரசன் அவர்களும், இரண்டாவது வெற்றியாளராக செல்வி.பிரவீனா அவர்களும், முதலாவது வெற்றியாளராக திரு. கந்தசாமி அவர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.
இவர்களுக்கான சிறப்பு பரிசீல்களை, மூன்றாவது பரிசினை சித்திரம் டிவி பார்ப்பதற்குரிய சித்திரம் டிவி பாக்ஸ், அதற்கானஒரு வருட சந்தாவினையும் திரு.தயா அவர்கள் வழங்கி இருந்தார்.
சித்தி பிராண்ட் ஏற்றுமதி இறக்குமதி நிறுவன உரிமையாளர், திரு. மோகன் அவர்கள் இரண்டாம் பரிசுக்கான 250 யூரோக்களை வழங்கி இருந்தார்.
முதலாவது வெற்றியாளருக்கான பரிசினை மோகன் ஜுவல்லரி உரிமையாளர் திரு.மோகன் அவர்கள் ஒரு பவுன் தங்கநாணயத்தினை வழங்கியிருந்தார்.
மேலும் முதலாவது பரிசினை வென்ற திரு, கந்தசாமி அவர்களுக்கு "மனோ அக்கா விருது 2025"எனும் சிறப்பு விருதும்வழங்கப்பட்டது.
மனோ அக்கா உறவு.