NPP அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்கின்றது - தவராசா கலையரசன்
அரசாங்கமானது மக்களுக்கு தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது;ஆனால் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
NPP அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.
மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது. தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
எமது நாட்டில் கடந்த காலங்களில் மாகாண சபை அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.அண்மைக்காலங்களில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த மாகாண சபை முறைமை இன்றும் கூட இழுபறியான நிலைமையில் காணப்படுகின்றது. தற்போது எமது கட்சியின் சார்பாக சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்டோர் மாகாண சபை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்கள். எனவே தான் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.
இந்த நாட்டின் தலைவர் ஊழலற்ற நிர்வாகத்தை நடாத்த வேண்டும் என்ற அடிப்படையில் சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் இந்த மாகாண சபைக்கு இருந்த அதிகாரங்களை கட்டம் கட்டமாக குறைத்து இந்த மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கையாண்டு கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த அரசாங்கமானது மக்களுக்கு தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. இதில் ஆட்சி அதிகாரங்களை கையாள்கின்ற போது மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள்.ஆனால் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அத்துடன் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏதோ இழுத்தடிக்கின்ற நடைமுறைகளை தான் கொண்டிருக்கின்றது.எதிர்காலங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சிறுபாண்மை மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்க மாட்டார் எனத் தெரிகின்றது.
காணெளி : https://youtu.be/rsBigPpVAYQ


