Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அவன் இயங்கவில்லை…இயக்கப்படுகின்றான் - சட்டத்தரணி சுகாஸ்

மக்களின் உளவியலறிந்து அரசியல் வியாபாரம் செய்ய வந்த வியாபாரி - அவன்!

அவன் பைத்தியமில்லை! நிச்சயமாக முட்டாளுமில்லை! மக்களின் உளவியலறிந்து அரசியல் வியாபாரம் செய்ய வந்த வியாபாரி - விபச்சாரி அவன்! மாகாண சபைத் தேர்தலுக்கு இப்பவே கதை எழுதத் தொடங்கிவிட்டான்.
அவன் இயங்கவில்லை…இயக்கப்படுகின்றான்.

எதற்காக? 
மிஞ்சியிருக்கும் இனத்தின் எதிர்காலத்தைச் சூனியமாக்க.இனப்படுகொலைக்கான நீதியை இல்லாமலாக்க.அவன் வென்றுவிட்டான்.

எப்படி?
எம்மினத்தையே கோமாளிகளாகப் பார்க்க வைத்துவிட்டான். தமிழரின் தரம், தராதரம் இதுதான் என்று  உலகுக்குக் காட்டிவிட்டான். பெண்களோடு சுற்றுவதும், அன்ரிகளோடு அளவளாவுவதும், தூசணங்கள் பேசுவதும் , போதையிலே பீற்றுவதும்தான் அரசியலுக்கான அடிப்படைகள் என்று எதிர்காலத் தலைமுறைக்குத் தவறான வகுப்பெடுத்துவிட்டான்!
உயரிய சபையில் அநாகரிகமாக, அவதூறூக, அரியண்டமாகப் பேசுகின்றான்! குறைந்தபட்சம் ஒழுக்காற்று விசாரணைகூட நடாத்தப்படவில்லை.

ஏன் நடாத்தப்படவில்லை?
அவர்களுக்கு வேண்டியதும் அதுதானே! அப்பதானே சர்வதேச விசாரணை கேட்ட இனம் நாளைக்குத் தறிகெட்டுத் திரியும். எழுதிவையுங்கள்! அவனின் நாடகம் இன்னும் முடியவில்லை. உங்களின் உளவியலறிந்து ஏமாற்றும் பாங்கறிந்து மாகாண சபைக்கும் உங்கள் முன் வருவான்! ஆனால் அடுத்த பாராளுமன்றுக்கு வரமாட்டான்!  பணப்பெட்டியோடு ஐரோப்பிய நாடொன்றுக்குக் குடிபெயர்வான் “வைரத்தோடு”.

சிந்தியுங்கள்!
அல்லது இனத்தின் எஞ்சியிருக்கும் கோமணமும் கழன்றுவிடும்! அண்ணன்  சீமான் எங்களின் சொந்தம்! அரசியல் கடந்த தமிழ்த் தேசியப் பந்தம்! முடிந்தால் சீமானைத் தொட்டுப்பார்!என சட்டத்தரணி சுகாஸ்  தெரிவித்துள்ளார்.