Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷியா – உக்ரைன்

.

நேட்டோ என்ற நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தனது எல்லைப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என நினைத்த ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய தயாரானது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை.உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ஆரம்பத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்த போரால் இருநாடுகளில் உள்ள மக்கள் தொகையில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஷியா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா்.

இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷிய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.