Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டி தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்!

.

யாழ். வடமராட்சியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புச்சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகளின் கொடியைப் பறக்க விடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக் குறித்த விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் உடுப்பிட்டியில் கடந்த 26ஆம் திகதி விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸில் முறையாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மறுநாள் 27ஆம் திகதி உடுப்பிட்டியில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான கொடி பறக்க விடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவை தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து , பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்று அவற்றை அகற்றியதுடன், அவற்றை சான்றுப்பொருட்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

இத்தகைய நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.