சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கிய தமிழ்! ஸ்டாலினை கேட்கும் சுப்பிரமணியன் சுவாமி.
ஆரசியல் இலாபத்திற்காக இனத்தை கூவி விற்கும் கூட்டுக் களவாணிகள்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் நமக்கான நிதியை இன்னும் தரவில்லை என இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் திமுகவின் இந்திய எதிர்ப்பு மனநிலையை கற்பனை செய்து பாருங்கள் எனவும், தமிழில் ஏற்கனவே சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொற்கள் தான் 40 சதவீதம் இருக்கிறது என விமர்சித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. குறிப்பாக திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு இல்லை எனவும், விருப்பப்பட்ட பிற மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என பாஜக கூறி வருகிறது. மேலும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படும், நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் இந்தி படிப்பதை திட்டமிட்டு திமுக தடுப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் அது இந்தி திணிப்பு எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு மொழிப்போரை சந்திக்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதில்,"காலம் மாறிவிட்டது அதனால் ஹிந்தியை திணிப்போம் என்கிறார்கள் இன எதிரிகள் எத்தனை காலங்கள் மாறினாலும் அதற்கு ஈடு கொடுத்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மீது இந்தி சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரை கொடுத்தேனும் தமிழை காப்போம் சமஸ்கிருதத்திற்கு பதில் தமிழிலேயே கோவில்களில் அர்ச்சனை செய்யலாமா தமிழும் செம்மையான மொழி தானே என கேட்டு பாருங்கள் அவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் அடையாளமும் அம்பலமாகிவிடும்.இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். இங்குள்ள பாஜகவினர் எப்படிப்பட்டவர்களோ!" என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழில் ஏற்கனவே சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொற்கள் தான் 40 சதவீதம் இருக்கிறது என விமர்சித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," ஹிந்தியை எதிர்க்கும் திமுகவின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். வட இந்தியாவின் பேச்சு வழக்கான ஹிந்தியையும் நான் எதிர்க்கிறேன். நான் ஒரு தமிழனாக, அரசியலமைப்பின் 351வது பிரிவில் கூறப்பட்டுள்ள "சமஸ்கிருத இந்தி" கற்க வேண்டும். தமிழில் ஏற்கனவே 40% சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து கடனாக பெறப்பட்டவை தான். பெற்றுள்ளன, எ.கா., ஸ்டாலினின் மனைவிக்கு துர்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. அவரது தந்தை: கருணாநிதி!" என கூறப்பட்டுள்ளது.