யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-08.
.
இராசநாயகம், 1870 அக்டோபர் 22 இல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலான செல்லப்பா பிள்ளையின் மகனாகப் பிறந்தார். கொழும்பில் உள்ள புனித தோமையர் கல்லூரியில் கல்வியை முடித்துக்கொண்ட இவர், தனது 19 ஆவது வயதில் அரசாங்க சேவையில் எழுத்தர் பணியில் அமர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்த இவருக்கு 1920ல் முதலியார் தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது. 1923 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிசார் சேவையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணி புரிந்த இராசநாயகம் 1929 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். 1940 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் தேதி இவர் காலமானார்.
இவர்யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. யாழ்ப்பாண வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் ஒரு நூலாக எழுதவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டபோது. ஏற்கனவே யாழ்ப்பாண வரலாறு பற்றி இருந்த நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாகப் பல புதிய தகவல்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார்.[3] இதனால் இது குறித்த ஆய்வில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டது. பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்த இவர் அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாகவே வெளியிட விரும்பினார். இத்தகைய ஆய்வு நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பது கூடிய பயன் தரும் என்று எண்ணிய அவர் Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[3] எனினும், மாணவர்களும் ஆங்கிலம் தெரியாத பிற தமிழரும் இலகுவாக வாசித்து அறிந்து கொள்ளக்கூடிய வகையில் யாழ்ப்பாண வரலாறு குறித்த நூலின் தேவையை அவர் மறந்துவிடவில்லை. தனது ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார்.
1870 சனவரி ஏற்றுமதி வரி நிறுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து முதலாவது நீராவிக்கப்பல் சுயஸ்கால்வாயூடாக இங்கிலாந்து சென்றது.சனவரி 22 திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் யாழ்ப்பாண கன்னியர் மடத்தில் வசிக்கத்தொடங்கினர்.
பெப் 22 சங்கைக்குரிய சகோதரர் கொன்வே பாரிசவாத நோயால் மரணமடைந்தார்.
நெவின்ஸ் பிள்ளை சாமுவேல் மட்ராக் சட்டக்கல்லூரியில் சட்டம் பயில சென்றரர்.
மார்ச் 9 அமலோற்பவ தியானிகள் அமைப்பு ஓர் நிலம் வாங்கினார்.
மார்ச் 29 மாட்சிமை தங்கிய எடின்பறோகோமகன் இலங்கை வந்தார்.
யூலை 19 பிரான்ஸ் புறுசியா போர் ஆரம்பமாகியது.
செப் 17 ஆலய சபையை சேர்ந்த திரு.கூல், பெ.கென்றி, ஜி.சம்பியன் ஆகியோர் கொழும்பு பிசப்பினால் நல்லூர் ஆலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டனர்.
1871 யாழ்ப்பாண செய்திகள் பத்திரிகை திரு கியூஸ் னால் ஆரம்பிக்கப்பட்டது.
மார்ச் பிரெஞ்சு புருஸ்சிய போரில் காயப்பட்டவர்களுக்கும் நோய் நோய்வாய்பட்டவர்களுக்மென 10567 பவுண்ட்ஸ் நிதி
சேகரிக்கப்பட்டது.
மார்ச் 26 முதலாவது குடிசனக் கணக்கெடுப்பு இலங்கையின் குடித்தொகை 24.05.287
ஆகஸ்ட் 2 புதுகாலனித்துவ நீராவிக்கப்பல் 'செரன்டிப்' கொழும்பு வந்து சேர்ந்தது.
ஆகஸட் 9 சிறந்த சட்டத்தரணியும் பத்திரிகையாளனும் சட்டவியலாளனுமான சி. ஏ லோறன்ஸ் மரணமடைந்தார்.
ஆகஸ்ட் மன்னார் அரச பாடசாலை கத்தோலிக்க மிசனிடம் கையளிக்கப்பட்டது.
நவம்பர் 7 யாழ்ப்பாயத்தில் பிரபல்யமான மரண சாசன வழக்கு எதிரிகள் மூவரும் கொழும்பு நீதிமன்றால் குற்றவாளிகளாக 6 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
டிசம்பர் 12 பூரண சூரிய கிரகணம் யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து அவதானிக்கப்பட்டது. இதற்கென ஒரு குழு திரு. லொக்கயர் தலைமையில் வந்தது.
டிசம்பர் 19 யாழ்ப்பாண பேராலயத்தில் முதன் முறையாக மூன்று கத்தோலிக்க குருமார் பி.ஒ.பிளானகன்,ஏ.று. ஓ.வேட்ரன் ஆயர் பொன் ஜோன்ஆண்டகையினால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1872 சனவரி 1 இலங்கை ரூபா சதம் நாணயம் வெளியிடப்பட்டது ஐந்து ஆண்டுகள் கொழும்புத்துறை அனாதைகள் இல்ல பொறுப்பாளராக இருந்த வண பிதா புவாசே ஊர்காவல்துறைக்குமாற்றப்பட்டார் அவருடைய இடத்திற்கு வண பிதா சலமொன் நியமிக்கப்பட்டார்.
சனவரி 4, சேர் கேர்கியுனிஸ் ரொபின்சன் இலங்கையை விட்டுவெளியேறினார் அவருடைய இடத்திற்கு கென்றி ரேன இர்விங் லெப்டினன்ட் கவர்னராக ஆக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 4, கௌரவ திரு.எச்.கிறகரி இலங்கை நிர்வாகத்தை பொறுப்பேற்றார்.
மார்ச், தென் இந்தியாவில் பிரபல்யமான வேதநாயக சாஸ்திரியாரின் மகன் ஞானதீபம் யாழ்ப்பாணம் வந்து இசைப் பிரசங்கம் மூலம் வெகுனசன பக்தி இயக்கத்தை ஆரம்பித்துவைத்தார்.
ஏப்ரல் 4, கௌரவ வில்லியம் கிறகோரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
மே 21, ஊர்காவற்துறை பொலிஸ்மா ஜிஸ்திரேட் ஆக சைமன் கதிரவேலுப்பிள்ளை திரு வி. கிறகோறியினால் நியமிக்கப்பட்டார். யூலை 3, யாழ்ப்பாணக்கல்லூரி திறக்கப்பட்டது. அதன் முதல் அதிபராக வண இ.பி. காஸ்ரிங்ஸ் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 8 மடு செபமாலை மாதா கோவிலுக்கான அத்திவாரத்தை ஆயர் பொன் ஜோன் போட்டார்.புனித சார்ள்ஸ ;மிசன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1872 ஆகஸ்ட் 24 யோன் ஓலிக சேகர முதலியார் அரச களஞ்சிய காப்பாளர் நீரிழிவு நோயினால் மரணமடைந்தார்.
செப்டம்பர் யாழ்ப்பாணக்கத்தோலிக்க இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் கல்லூரி பல்வகை துணுக்குகள் தொகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1873 சனவரி 9 சுதேச வைத்தியர் கனகசபைபிள்ளை எவாட்ஸ் மரணமானார். இவர் திருவருட்புராணத்தை இயற்றியவர் ஆவார். இவரின் மகன் ஜெரேமிய எலாட்ஸ் சுண்டுக்குளி குருமடத்தின் தலைமை ஆசிரியராகும்.
பெப்ரவரி யாழ்ப்பாண கத்தோலிக்க தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 28 டானியல் டி சேதம் யாழ்மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ரார்.
யூன் 18 யாழ்ப்பாணத்தில் 54 வருடங்கள் வகித்தவரும் ஆங்கில தமிழ் அகராதியை எழுதியவரும் உடுவில் பங்கிற்கு பொறுப்பாகவுமிருந்த வண லெவி ஸ்போர்டிங்கடிகளார் தனது 83 வயதில் மரணமானார்.
1873 செப்டம்பர் 6 வட மத்திய மாகாணம் நிறுவப்பட்டது. இதன்மூலம் இலங்கையின் நிர்வாகம் ஏழுமாகாணங்களாக பிரிக்கப்பட்டது. திரு ஜே இ டிக்சன் அதன் அரச அதிபராக நியமிக்கப்பட்டார். டேவிட் றோட் சேர் வில்லியம் ருலைன் காம் இனால்
திறந்து வைக்கப்பட்டது.
1874 சனவரி 22 கோவா சபையை சேர்ந்த கடைசி குருவானவர் வண மத்தியூஸ் சயித்தானோ மரணமடைந்தார்.
ஆந்தா சென் பீற்றர்ஸ் கல்லூரியை சேர்ந்த திரு மக் மகோன் யாழ்ப்பாண ஆண்கள் குருமடத்தை பொறுப்பேற்றார்.
பெப்ரவரி 8 சேர் வில்லியம் கிறகரி இரண்டாவது தடவை யாழ்ப்பாணம் வந்தார். அவருடன், அவரது அந்தரங்க செயலாளர் கொக்பேர்ன் ஸ்ருவாட் காலனித்துவ செயலாளர் டாக்டர் சார்ள்சும் வந்திருந்தனர். முதலியார் முதலியார் சவரிமுத்துவிற்கு தங்கப்பதக்கமும் சங்கிலியும் அளித்து கௌரவித்தார் அன்று மாலை முதலியார் சவரிமுத்து ஆளுனருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார்.
மார்ச் 10 மன்னாரில் உள்ள முத்துக்குளிக்கும் நிலையம் 10,000 பவுண்ஸ் பணம்மீட்டியது.
யூலை 23 சட்டசபை அங்கத்தவர் தமிழர் பிரதிநிதி முத்துக்குமாரசாமி, சேர் பட்டமளித்து கௌரவிக்கப்படார். ஞானபிளந்த புராணம் மதராசில் அச்சிடப்பட்டது.
ஆவணி யாழ்ப்பாணக் கச்சேரி அதிகாரி நிகோலாஸ்பிள்ளை சின்னத்தம்பி மரணமானார்.
செப்21 சோனியர் தெருவில் ஒரு பாடசாலை வெஸ்ரியன் மிசனைச் சேர்ந்த வண ஜே கில்னரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒக்டோபர் 7 அநுராதபுரத்திற்கு தந்தி சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஒக்டோபர் 28 மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி மேரி கி. ஸ்போல்;டிங் மரணமானார். அவருடைய உடல் தெல்லிப்பளையில் உள்ள அமெரிக்க மிசன் லைமன் கதிரவேல்ப்பிள்ளையின் தந்தையாவார்.
1875 ஏப்ரல் சாஸ்திரியும் கல்விமானுமாகிய அப்பையர் மானிப்பாயில் மரணமானார்.
மே 25 வண பிதா மோலுவாவின் 25வது ஆண்டு வெள்ளியூபிலி விலையுயர்ந்த பீடக்குவளை அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்
பட்டது. யாழ்ப்பாண உடையார் யோசப் தனது 53வது வயதில் காலமானார்.
யூலை கூலியாக வந்து வடக்குவீதியில் குடியேறியவர்கள் மத்தியில் கொலரா நோய் பரவிற்று. 500பேர் இறந்தனர்.
ஆகஸ்ட் 11 இலங்கைக்கு விஜயம் செய்யும் வேல்ஸ் இளவரசனை வரவேற்பது பற்றி கொழும்பில் பெரிய ஆயத்தக் கூட்டம் இடம்பெற்றது.
ஒக்டோபர் சேர். பட்டம் பெற்ற மு குமாரசாமிக்கு கொழும்பு வாழ் தமிழர்கள் தங்கச்சங்கிலியும் தங்கத்தகடும் அன்பளிப்பாக வழங்கி பெரும் வரவேற்பளித்தனர். யாழ்ப்பாணத்தில் வேல்ஸ் இளவரசனுக்கு அன்பளிப்பு வழங்க சேர்க்கப்பட்ட நிதி 10,000 ரூபாயை அண்மித்தது, தலைப்பாகையும், ஆபரணங்களும் தயாரிக்கப்பட்டன.
நவம்பர் யாழ்ப்பாணத்தில் கொலரா மீண்டும் ஆரம்பித்தது.
டிசம்பர் 1 வேல்ஸ் இளவரசன் (பின்னாளில் இவரே 7ம் எட்வேட் அரசனராகினார்.) கொழும்பில் வந்து இறங்கினார். திரு சொலமன் ஜோன்பிள்ளை இலங்கை தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் செய்து அவர்கள் சார்பில் வாழ்த்து சொல்லி வாழ்ந்தார். யாழ்ப்பாணக் கச்சேரியில் இருந்து கனகரத்தின முதலியார் பரிசுப்பொருட்களின் தலைப்பாகையையும், ஆபரணங்களையும் அன்பளிப்பு செய்தார்.
டிசம்பர் 8 கொழும்பு கரையோர தடுப்பு சுவருக்கான அஸ்திவாரத்தை வேல் இளவரசர் தொடக்கி வைத்தார். இதே நாளில் அவர் இலங்கையை விட்டு வெளியேறினார். அவருடைய வருகைக்கான உத்தியோக பூர்வ செலவு 110,000 ரூபாயாகும். அதைவிட தனியார் வழங்கிய பணம் 50000 ரூபாயும் செலவிடப்பட்டது.
1876 சனவரி 4 ஊர்காவல்துறை கத்தோலிக்க சேமக்காலை ஆசிர்வதிக்கப்பட்டது. அன்று மதில் கட்டுவதற்கான செலவில் பாதி அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.
சனவரி 27 ராணி அப்புக்காத்து சேர் ஆர்.எப்.மோர்கன் காலமானார். இவர் சிலகாலம் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அத்துடன் அக்காலத்தில் கௌரவமான, பிரபல்யமிக்க இலங்கையராகவுமிருந்தார்.
பெப்ரவரி 19 யாழ்ப்பாண 'கத்தோலிக்க சாலமன் பத்திரிகை' வெளியிடப்பட்டது. திரு.இ.முருகப்பர் அதன் ஆசிரியராக இருந்தார்.
பொலநறுவை கபறண - தம்மன்கடவை வீதியில் கண்டெடுக்கப்பட்ட சிங்க கல்லை அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதை கண்டெடுத்த திரு ஆம்ஸ்ரோங் கொழும்பிற்கு கொண்டுவந்தார். நீண்ட காலம் மண்ணிற்குள் புதைந்திருந்த அக்கஸ் தற்போது
கொழும்பு கண்காட்சி சாலையில் வெளிப்பகுதியில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைக்கப்பட்டுள்ளது.
1876 ஏப்ரல் பளிங்கினால் செய்யப்பட்ட பீடங்கள் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாண பேராலயத்தின் பீடத்தில் வைக்கப்பட்டது. அதன் பெறுமதி 1000 ரூபாயாகும்.
ஏப்ரல் 20 இந்தியாவின் சக்கரவர்த்தினியாக விக்டோரியா மகாராணி லண்டன் கசட் மூலமாக பிரகடனப்படுத்தப்பட்டார்.
ஒக்டோபர் 21 யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொலரா ஆரம்பித்தது.
ஒக்டோபர் 26 இந்தியாவையும் இலங்கையையும் றெயில் பாதையால் ஒருங்கிணைக்கும் திட்டத்தை பக்கிங்காம் பிரபு முன் மொழிந்தார்.
நவம்பர் 26 கொலரா நோயாளர்களை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல விடாமல் கரையூர் மக்கள் தடுத்தனர். அதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு முற்றியது. பொலிசார் பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.
டிசம்பர் 23 சங்கைக்குரிய சகோதரர்கள் சேவியர் சந்திரசேகரா மிக்காயேல் ஆகியோர் குருமாராக திருநிலைப்படுத்தப்பட்டனர்.
டிசம்பர் கட்டுக்கஸ் தோட்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல்யமான பொதுசன மராமத்து இலாகா அதிகாரி
வேலுப்பிள்ளை முதலியார் காலமானார். சிவில் பொறியியலில் இது ஓர் மைல்கல் ஆகும்.
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் லோங்ரன் அன்கோ புகைப்பட ஸ்ரூடியோ ஆரம்பிக்கப்பட்டது.
1877 சனவரி 1 வைஸ்றோய் எயிட்டன் பிரபு முன்னிலையில் டெல்லியில் நடந்த ஓர் பெருங்கூட்டத்தில் சமூகமளித்த அரசர்கள் தலைமைக்காரர்கள் பிரபுக்கள் முன்னிலையில், விக்ரோறியா மகாராணி இந்தியாவின் சக்கரவர்த்தினியாக அறிவிக்கப்பட்டார்.
சனவரி கொலரா தொடர்ந்தும் யாழ்ப்hணத்தை பீடித்துக்கொண்டது.
சனவரி 8 முருகப்பா கத்தோலிக்க காவலன் பத்திரிகையை விட்டு முற்றாக வெளியேறி யா.ஆண்கன் குருமடத்தில் ஆசிரியராக இணைத்தார். திரு.ஜேம்ஸ், திரு.மார்டின் கத்தோலிக்க காவலன் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
சனவரி 10 பாசையூர் ஊர்காவற்துறை நவாலி போன்ற பல இடங்களுக்கு கொலரா பரவ தொடங்கியது.
மார்ச் 9 லெப்டினன் கவர்னர் எ என் பேர்ச் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
ஏப்ரல் அல்லைப்பிட்டிக்கு கொலரா பரவியது
மே 7 கபிரியேல் சொலமன் புவிராச சிங்கிம் அப்புக்காத்து மரணமானார்.
மே திரு.பிரான்சிஸ் முத்தையா ஆம்ரோங் கவர்னர் மாளிகையில் முதலியாராக நியமிக்கப்பட்டார்.
யூன் 3 9ம் பயஸ் பாப்பாண்டவரின் யூபிலி யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய இடங்களில் களிப்புடன் கொண்டாடப்பட்டது.
யூலை 13 யாழ்ப்பாணத்தில் கொலரா பற்றிய ஆணைக்குழு மீண்டும் நியமிக்கப்பட்டது.
யூலை 16 கொலரா ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு முன் வந்த அறிக்கையில் இருந்த தவறுகள் சுட்டிக்காட்ப்பட்டது. நோயினால் பீடிக்கப்பட்ட 541 பேரில் 224 பேர் மரணமானார்கள் 1875 ல் 1700 பேரில் 824 பேர் மரணமானார்
கள். 1871ல், 10972 பேரில் 5481 பேர் மரணமானார்கள். 1877 யூன் வரை யாழப்பாணம், தீவுப்பகுதிகள் அடங்கலாக 13213 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6891 பேர் இறந்தனர்.
யூலை 24 இலங்கையின் பிரபல்யமான பெரும்வீதி அமைப்பாளர் மேஜர் தோமஸ் ஸ்கின்னர் மரணமானார்.
1877 செப்ரம்பர் கவர்னர் சேர் மேஜர் லோங்டன் காலிக்கு வந்து சேர்ந்தார்.
செப்டம்பர் 22 தென் இந்திய கல்விமானாகிய அருளப்ப முதலியார் யாழ்ப்பாண தமிழ் கத்தோலிக்க காவலன் பத்திரிக்;கையின் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
ஒக்டோபர் யாழ்ப்பாணத்தில் கொலரா மீண்டும் தலைதூக்கியது. ஒருவகை வயிற்ரோட்ட நோய் பரவி வடமாகாணத்தில் 20 000 பேர் வரையில் இறந்தனர்.
ஒக்டோபர் 24 பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக பிரெஞ்சு கத்தோலிக்க மிசன் 1775 பிராங் பணம் அனுப்பி வைத்தது.
ஒக்டோபர் 24 'யாழ்ப்பாணம் மட்டக்களப்பு விவசாய வர்த்தக நிறுவனம்' என்ற முன்னேற்ற அமைப்பு கந்தளாய் நீரேரியில் இருந்து 20000 ஏக்கர் நீர்ப்பாசன நிலம் வழங்கப்படும் என்ற உறுதியை கவர்னர் லோங்டனிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
ஒக்டோபர் 27 அட்டாவதானியாக காணப்பட்ட கவிஞரும் கல்விமானுமாகிய நா ஏகாம்பரம் மரணமானார்
நவம்பர் 30 தானிய வரி பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. குத்தகைக்குவிடும் முறைமையை தவிர்த்து கட்டாய அறவிடல் முறைமையை அறிமுகப்படுத்தும்படி ஆணையாளருக்கான சிபாரிசு செய்தனர்.
டிசம்பர் 1 ஏழைகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.
டிசம்பர் 19 நெடுந்தீவில் கொலராவும் சின்னமுத்து பரவிற்று மக்கள் உணவும் உடுப்பு இன்றி துன்பப்பட்டனர். 1954 ரூபா பெறுமதியான பொருட்கள் கத்தோலிக்க மிசனால் வழங்கப்பட்டது. பலர் பட்டினியால் இறந்தனர். சில்லாலையில் கொலரா பரவத்தொடங்கியது. கரையூரில் கடல்பகுதிகளை மண் போட்டு மீட்கும் வேலைத்திட்டம் சேர் வில்லியம் கிறகறியால் ஆரம்பிக்கப்பட்டது.
1878 மார்ச் 5 ராமவிலாசம் நூலை எழுதிய உடுப்பிட்டியை சேர்ந்த கல்விமான் ரி. சின்னத்தம்பி காலமானார்.
மே மாவட்ட இஞ்சினியராகவும் மேல்பார்வை அதிகாரியாகவும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி ஆம்ஸ்ரோங் முதலியார் வந்தார்.
ஒக்டோபர் சீனி அதிகாரி என்றழைக்கப்பட்ட திரு.எல்.கஸ்பார்பிள்ளை மன்னார் தீவிற்கு நியமிக்கப்பட்டார்.
1879 பெப்ரவரி அமல உற்பவ தியாகிகள் மேற்பார்வையாளர் நாயகம் அதி வணக்கத்திற்குரிய சூலியர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
பெப்ரவரி 30 யாழ்ப்பாண கத்தோலிக்கர்களுக்கு உயர் கல்வியை வழங்க கல்லூரி அமைக்கும் நோக்கத்துடன் யாழ்ப்பாண ஆண்கள் குருமடத்தில் மிகப்பெரும் கூட்டம் நடாத்தப்பட்டது.
மார்ச் மன்னாரில் முத்துக்குளித்தல் நிலையம் 52420 ரூபா பணமீட்டியது.
மே 3 கரவெட்டியில் நடந்த சைவ திருவிழாவின் போது தீப்பிடித்தது. 50 வீதமான பகுதி எரிந்து போனது.
மே 4 சட்டசபையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சேர் முத்துக்குமாரசாமி மரணமானார். 3கோடிக்கு மேற்பட்ட திராவிட மக்கள் மத்தியில் முதன்மையான தன் மனிதர் என இலங்கை ஒப்சவர் பத்திரிகை அவரை புகழ்ந்து எழுதியது.
1879 யூலை 18 வண பிதா மெலிசான் ஆட்ரானாவிற்கு ஆயராகவும் யாழ்ப்பாண அப்போஸ்தலிக்க சபையின் இணை ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.
ஒக்டோபர் 24 பிரபல்யமான கல்விமான சந்திரசேகர பண்டிதர் காலமானார். இவர் புரொட்டஸ்தாந்து சபையின் புத்தக மொழிபெயர்ப்புக்கு பெரும் பங்காற்றினார்.
டிசம்பர் 5 யாழ்ப்பாண சைவ மறுமலர்ச்சியாளர் உயர்திரு ஆறுமுகநாவலர் 56வது வயதில் மரணமானார்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -