Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஒரு மேசைக்கரண்டி முருங்கை இலை பொடி தினசரி எடுத்துக்கொள்வதால் என்னென்ன மாற்றங்கள்!

இயற்கையின் கொடை!

ஆற்றலை அதிகரிக்கிறது: 
தினமும் முருங்கை இலை பொடி எடுத்துக்கொள்வது உடலில் ஆற்றலை அதிகரிக்கும் ஒரு இயற்கையான வழியாகும். காலை எழுந்ததும் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர, ஆற்றல் அதிகரிக்கும். இந்த பொடியில் உள்ள இரும்புச் சத்து உடலில் ஆக்ஸிஜனை அனைத்து உறுப்புகளுக்கு கடத்தி செல்ல உதவுகிறது. மேலும், இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடல் சோர்வடைவதை தடுக்கும்.

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை: 
முருங்கை இலையில் 90 க்கும் மேற்பட்ட உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் உள்ளன, அவற்றில் சில ஃபிளாவனாய்டுகள், பீனாலிக்ஸ், கரோட்டினாய்டுகள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதாக NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி: 
முருங்கைக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. இதில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் குர்செடின் ஆகியவை உள்ளன, இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற சேர்மங்கள் ஆகும். காலை உண்ணும் உணவில், ஸ்மூத்தி போன்றவற்றில் ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடி சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

செரிமானத்திற்கு சிறந்தது: 
முருங்கைப் பொடி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது குடல் நுண்ணுயிரிகளை ஆதரிக்கிறது, குடல் ஒழுங்கை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தயிர் அல்லது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடி கலந்து குடிப்பது நாள் முழுவதும் செரிமான சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்: 
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து (NAFLD) கல்லீரலைப் பாதுகாக்க முருங்கை இலை பொடி உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வில், முருங்கை இலை பொடி NAFLD ஐ மாற்றியமைக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. மேலும், முருங்கை பொடியில் உள்ள சேர்மம் கல்லீரல் செல்களில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கொழுப்பை உடைக்கும் புரதங்களின் செயல்பாட்டை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

சரும பராமரிப்பு: 
முருங்கை இலை பொடியில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள், வயதானத தோற்றத்திற்கு பங்களிக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தவை. இதனை தினசரி எடுத்து வர சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் அதிகரிக்கும். 2022ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வில், முருங்கை இலை பொடி தோலில் ஏற்பட்ட காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுவதாக தெரியவந்துள்ளது.