Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

ஜேவிபியின் சர்வதிகாரம் தொடர்கிறது

,

ஜேவிபியின் சர்வதிகாரம் தொடர்கிறது தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்கள் திட்டமிட்டு நிராகிரிப்பு இருந்த போதும் தமிழ் மக்கள் கூட்டணி துவண்டு விடாது சீறிப்பாயும் எனவும் யாழ் மாநகர சபையில் தமிழ் கட்சி ஒன்றுக்கு எமது ஆதரவு நிச்சயம் இருக்கும் எனவும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். 

யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அலுவைகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த மாதம் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருகின்றது. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்து நான்கு பிரதேசங்களில் யாழ் மாநகரசபையில் ஒரு வேட்பாளர் அத்தாட்சிப்படுத்தல் பத்திரத்தில் ஒரு வேட்பாளர் சத்திய பிரமாண ஆணையாளரின் உறுதிப்படுத்தல் இன்றி நிராகரிக்கப்பட்டது. 

மேலும் மூன்று சபைகளில் இளம் வேட்பாளர் போதாமை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இது அடிப்படை மனித உரிமைகள் மீறல் என உயர் நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்தோம். ஆனால் நீதிமன்று அதனை தள்ளுபடி செய்தது. ஆனால் இதே காரணங்களுக்காக பிறப்பு அத்தாட்சிபடுத்தல் பத்திர உறுதிபடுத்த முடியாத காரணத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்று கொள்ளுமாறு ஏனைய தரப்புக்களுக்கு உத்தரவு வழங்கியது . 

இலங்கை தேர்தல் திணைக்களத்தினால் ஒரு நீதிமன்று மற்றைய நீதிமன்றுக்கு முரணாக இருந்தது. சட்ட சிக்கல்களை உருவாக்கியது. வழக்கு தாக்கல் செய்பவருக்கு மாத்திரமே தீர்வு என்ற போர்வையில் காரணங்கள் இருந்தது. 

ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவில் சொன்னது போல ஏப்ரல் 20 முன்னர் வழக்கு தாக்கல் செய்ய கூறினார்கள். நாங்கள் இதற்காக பல இலட்சங்களை செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்று ஒரு தீர்வை வழங்கினால் அது அனைவருக்கும் பொருந்தும் என தெரிந்தும் எம்மை வழக்குத் தாக்கல் செய்ய வைத்து காலதாமதமாகி விட்டது என கூறி, எதிருங்கள் என மறைமுகமாக ஜனநாயகத்தை எள்ளி நகையாடி நடைபெறும் தேர்தல் இதுவாகும் . சிஸ்டம் சேஞ் என்றார்கள் ஆனால் ஜனநாயகத்தை புதைக்கின்றார்கள் . 

ஜேவிபியின் முன்னர் கருதப்பட்ட மாக்ஸிச லெனினிச கொள்கைகள் உடைய ரஷ்யா, சீனா, கியூபா என இடதுசாரிகள் இருகின்ற நாடுகளை போல மிக ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழுவின் ஊடாக தேர்தல்களை இல்லாது செய்கின்ற சூழலும் ஏற்படும். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் இந்த தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும். 

ஊழல் பொருளாதார மீட்சி. கூறி இவ்வாறான தரப்புக்களை ஜேவிபியை மண்ணிலே வேரூன்ற விடாது பொறுப்புடன் செயற்படவேண்டும். எங்களுடைய மாநகர சபை நாம் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டோம். ஆகவே இங்கே மாநகர மக்களின் வாக்குரிமையும் கேள்விக்குள்ளானது . 

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரில் நாம் ஜனநாயக ரீதியாக போட்டியிட்டு வருகின்றோம். இளமையான துடிப்பான நேர்மையான எமது இளம் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். சதி நடவடிக்கைகளுக்குள் சிக்காமல் நாம் பல அடி தாண்டி பாய்வோம். நாம் ஏனைய சபைகளில் கைப்பற்றுவோம். நல்லூர் பிரதேச சபை காரைநகர் பிரதேச சபையினையும் கைப்பற்றுவோம் . 

எங்களுடைய இருப்பினை நாம் தக்கவைப்போம். மாநகர சபையில் இருவருடம் செய்த சேவைகளை ஏனைய சபைகளிலும் மேற்கொள்வோம். ஏனைய கட்சிகள் தமிழ் தேசியத்துடன் இணையுமானால் நாம் எங்களுடைய ஆதரவினை குறித்த ஒரு கட்சிக்கு வழங்குவோம்.