Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 
நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Scott Edwards அதிகபட்சமாக 37 ஓட்டங்களையும், Bas de Leede 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Salman Mirza 03 விக்கெட்டுக்களையும், Mohammad Nawaz, Abrar Ahmed, Saim Ayub ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 
இதன்படி 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 47 ஓட்டங்களையும், Faheem Ashraf ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 
பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் Aryan Dutt மற்றும் Paul van Meekeren ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.