Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

,

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை பதவி விலக கோருவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன அனைத்து பல்கலைக்கழக பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களையும் தாமாக பதவி விலகுவதாக கடிதங்களை வழங்குமாறு பதிவுத் தபால் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சகல பேரவை உறுப்பினர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிலை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.