Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லுார் தேர் திருவிழாவில் இளைஞனின் ஆண் உறுப்பில் குத்தி சங்கிலி திருடிய யுவதி!!

தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நல்லூர் ஆலய தேர் திருவிழா  வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை , அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.
அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பொலிசாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.
அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் , அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் பொலிஸார் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதேவேளை நல்லுாரில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்த பகுதியி்ல் மக்கள் முண்டியடித்து பார்சலாக வாங்கிக் கொண்டிருந்த போது அந்தக் கூட்டத்துக்குள் இளைஞன் ஒருவனை நெருங்கி வந்த சில பெண்கள் அவனது ஆண் உறுப்பை குறி வைத்து கைப் பையினால் குத்திய போது இளைஞன் வலியால் நிலைகுலைந்து தடுமாறிய தருணத்தில் அவனது 2 பவுண் சங்கிலி களவாடப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை நெருங்கி நின்ற இளம் பெண்கள் சிலரே சங்கிலியை திருடியிரு்க்கலாம் என கருதப்படுகின்றது. வலியால் துடிதுடித்து கூட்டத்திலிருந்து வெளியே வந்த இளைஞன் சிறிது நேரத்தின் பின் வலி குறைந்தவுடன் சுதாகரித்து நின்ற போது தனது கழுத்திலிருந்த சங்கிலி களவாடப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதிர்ந்து நின்றதாக பக்தர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.