“இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”; மனித உரிமைகள் குறித்து விளக்கம்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தான் நியமிக்கப்பட்டால், மனித உரிமைகள் விவகாரத்தை சிறப்பாக கையாள முடியும் என எலிசபெத் கே. ஹோர்ஸ்ட்.
“இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”; மனித உரிமைகள் குறித்து விளக்கம்.
அத்துடன், இலங்கையில் துடிப்பான சிவில் சமூகம் இருப்பதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன் தனது ஆரம்ப அறிக்கையை வழங்கினார்.
இதன்போது, குழுவின் தலைவரான செனட்டர் பென் கார்டின், இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை கையாள்வதில் ஹார்ஸ்டின் அர்ப்பணிப்பு மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய எலிசபெத் கே. ஹோர்ஸ்ட்,
அண்மையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் இலங்கை மக்களுக்கான அடிப்படை சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கான அமெரிக்க தூதரகத்தின் குறிக்கோள் குறித்து விளக்கமளித்திருந்தார்.
மேலும், இலங்கையில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், மனித உரிமைகள் விடங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி குறித்தும் அதன் உறுப்பினர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.