Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்!

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

வாக்காளர்கள் இன்று  மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..

இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

திகாமடுல்ல  – 12%
நுவரெலியா – 20%
யாழ்ப்பாணம் – 6%
வவுனியா – 31.5%
மன்னார் – 12%
அம்பாறை – 12.5%
அநுராதபுரம் – 10% – 15%
மொனராகலை – 15%
பதுளை – 20%

யாழில். 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள்  தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர். மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளரான முருகேசு அமிர்தமந்திரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர். தாக்குதலுக்கு இலக்கானவர், தலையில் காயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்