இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி
.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பெர்த்தில் விளையாடிய அதே 13 பேர் கொண்ட அணி எந்த மாற்றமும் இல்லாமல் அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே களமிறங்கும் என அறிவித்துள்ளார்.முன்னதாக, பெர்த் மைதானத்தில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்தாலும், அதே அணியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த தோல்வியானது 40 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியைக் குறித்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, பெர்த் டெஸ்டில் 17 ஓவர்கள் வீசிய பிறகு மிட்செல் மார்ஷின் உடற்தகுதி குறித்து கவலைகள் எழுந்தன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல்
மிட்செல் மார்ஷ் கிடைக்கவில்லை என்றால், ஆஸ்திரேலியா ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது.அவர் இல்லையெனில் ஜோஷ் இங்கிலிஷ் சேர்த்துக் கொல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸுடன் உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஸ்சாக்னே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ் ஸ்காட் போலண்ட்.