யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-03. பிரித்தானியர் யாழ்ப்பாண பட்டிணத்தை முற்றாக கைப்பற்றினர்.
டச்சுக்கால குடியிருப்புகள் 1658-1795
17.jpeg)
1756 - தெல்லிப்பளையை சேர்ந்த பூலோகசிங்கம் முதலியார் பிலிப் குமாரவேலன் யாழ்ப்பாண பட்டிணத்தில் கிழக்கிந்திய கம்பனியின் முதலாவது சுதேச வைத்தியராக நியமிக்கப்பட்டார்
1758 - கத்தோலிக்க திருமணங்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
1758 - யூன் 26 வண்ணார் பண்ணையை சேர்ந்த டொன் பிலிப்பு சிற்றம்பல முதலியார் கிழக்கிந்திய கம்பனியின் தரகராக நியமிக்கப்பட்டார்.
1759 - மார்ச் - பஸ்கா விசிறி டச்சு மூதாதையர் மத்தியில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
1759 - வண. கிறிஸ்டியன் பிரெட்ரிக் சுவாட்ஸ் இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பின் தீவு பூராவும் பிரசங்களை மேற்கொண்டார்.
1761 - ஆகஸ்ட் 10 மன்னார் சிறாப்பர் டொன் மனுவல் ராஜகாரி மனமுதலியார் ஓய்வு பெற்றார். இவரின் இடத்திற்கு இவரது மருமகனான மானிப்பாயை சேர்ந்த வலேரன் யோன் ராமநாதன் நியமிக்கப்பட்டார்.
1765 -மே 13 அந்தோனி மூயார் யாழ்ப்பாண கமாண்டராக நியமிக்கப்பட்டார்.
1768 - ஏப்ரல் டச்சுக்காரனின் கடைசி முத்துக்குளிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
1776- கத்தோலிக்க திருமணங்கள் டச்சு சீர்திருத்த முன்னிலையில் ்அல்லது சிவில் உத்தியோகத்தர் முன்னிலையில் நடத்த அனுமதிக்கப்பட்டது.
1782 சனவரி 11- சேர் எட்வேட் கியூஸ் தலைமையிலான ஓர் பிரித்தானிய கடற்படை அணியும் சேர் கெக்டர் மன்ரோ தலமையிலான தரைப்படை அணியும் திருகோணமலை நகரை தமது ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர்.
1782 - பெப்ரவரி 10 கோவாவில் புனித பிரான்சில் சேவியரின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டது.
1784 - கொழும்பில் டச்சு அரசன் நாணய சாலையால் வெள்ளி நாணயம் வெளிவிடப்பட்டது.
1784 - பல நாடகங்களை தொகுத்து வழங்கிய மட்டக்களபரபை சேர்ந்த கணபதி ஐயர் மரணமடைந்தார்.
1785 - கத்தோலிக்க பாடசாலைகளை தடைசெய்யும் சுவரொட்டிகள் கொழும்பில் விளம்பரப்படுத்தப்பட்டது.
1785 - இருபது வருடங்கள் சிறந்த நிர்வாகத்தின் பின் கொழும்பில் கவர்ணர் பால்க் மரணமடைந்தார்.
1785 - ஆகஸட் 15 கிளாளியில் புனித மிக்காயேல் தேவாலயம் கட்டப்பட்டது.
1785 - கவர்ணர் லான்டர் கிராப் பினால் நாணயத்தாள் வெளியிடப்பட்டது.
1789 - கவர்ணர் வெண்டர் கிராப் பின் கட்டளையின் பேரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் டச்சு கிபுக் இந்தியக் கம்பனியின் ஆளுகையின் கீழ் கரையோரப்பகுதிகளில் பால் வந்து வேறுபாட்டின் மொத்தம் 817,000 வசிப்பதாக பதிவு செய்யப்பட்டது.
1789 - யாழ்ப்பாணத்தில் முதலாவது புனித மரியான் தேவாலயத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது.
1790 - ஜனவரி டொன் நிக்கலஸ் திசவீரசிங்கன் முதலியார் யாழ்ப்பாண கச்சேரியில் ஓர் தொண்டராக நியமிக்கப்பட்டார்.
1790 - யூதர்களின் தோறா எனப்படும் விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் அரேபிய மொழியிலிருந்து தமிழிற்கு வண. பிலிப் டி மெலோ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, டச்சு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
1790 - ஆகஸ்ட் 10 கவி ஒரு டச்சு திருச்சபையின் விவிலிய மொழிபெயர்ப்பாளருமான பிலிப் டி மெலோ தனது 67வது வயதில் காலமாணர். இவரே டச்சு அரசாங்கத்தால் டச்சு கிறிஸ்தவ சபையில் நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கை குரவராவர். யாழ்ப்பாண டச்சுத் தேவாலயத்தின் பிரதம குருவாகவும் சில காலம் இருந்தார்.
1793 - யாழ்ப்பாணத்தில் பருத்தி பயிரிடப்பட்டது.
1794 - யாழ்ப்பாண சென் மேரிஸ் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது. முதல் பங்கு குருவாக கோவாவை சேர்ந்தலியா னோர்ட் றெபேரோ நியமிக்கப்பட்டார். டச்சு அரசாங்கத்தின் கடைசிக் காலங்களில் தேவாலயத்தின் மூப்பராக தோமைப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை இக்கோவில் கட்டுவதற்கான நிலத்தையும்,பணத்தையும் வழங்கியிருந்தார்.
1795 -ஆகஸ்ட் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய கவிஞரான கூழங்கை தம்பிரான் தனது 97வது வயதில்மரணமானார். பாவுந்தி தன்னுடன் இன்னும் பல நூல்களுக்கு இவர் விளக்கவுரை எழுதியிருந்தார். தனது இறுதிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிவியா தெருவில் வசித்து வந்தார்.
டச்சுகால குடியிருப்புகள் 1658-1795
பிரித்தானியர் காலம் 1795 -1948
1795 - செப்டெம்பர் கப்டன் ஸ்ருவாட் தலமையிலான ஓர் பிரித்தானிய படை பருத்திதுறையில் இறங்கி யாழ்ப்பாண நகரத்தை நோக்கி நகர்ந்தது.
1795 - செப்டெம்பர் 28, யாழ்ப்பாணம் ஜெனரல் ஸ்ருவாட் தலமையிலான பிரித்தானிய படையிடம் யாழ்ப்பாணம் சரணடைந்தது.
1795 - டிசம்பர் பிரித்தானியர் யாழ்ப்பாண பட்டிணத்தை முற்றாக கைப்பற்றினர்.
டிசம்பர் - 03 ஜோன் ஜார்விஸ் என்பவர் வரி வசூலிப்பவராக நியமிக்கப்பட்டார். வன்னி புறம்பாக நிர்வகிக்கப்பட்டது.
1796 - பெப்ரவரி 16, கொழும்பு பிரித்தானியரின் கைகளில் வீழ்ந்தது. ஆங்கிலேயர்கள் இலங்கைத்தீவின் புதிய எஜமானர்களானார்கள். இலங்கைத்தீவு மதராசிலிருந்து நிர்வகிக்கப்பட்டது.
1796 - செப்டெம்பர் 26 முதலாவது முத்துக்குளித்தல் நிலையம் ஆங்கிலேயர் 60,000 பவுண்ஸ் லாபமீட்டினர்.
1797 - ஒரு முத்துக்குளித்தல் நிலையம் 110,000 பவுண்ஸ் லாபமீட்டினர். பேர்ட்டன் கேச் பார்பற் யாழ்ப்பாணதில் புதிய கலைட்டர் ஆக நியமிக்கப்பட்டார்.
1798 - ஒக்ரோபர் 12 இலங்கை அரச காலனியாக்கப்பட்டது. பிரெட்ரிக் நோத் இலங்கையின் கவர்னராக்கப்பட்டார்.
1798 - டொன் நிக்கலஸ் திசவீரசிங்கா முதலியார் யாழ்ப்பாண கச்சேரியின் தோப்பு பேணுபவராக நியமிக்கப்பட்டார்.
1799 - ஒரு முத்து குளித்தல் நிலையம் 30,000 பவுண்ஸ் லாபமீட்டியது.
1799 -ஜனவரி 15 இலங்கைக்கு அடிமைகளை கொண்டுவருவது தடை செய்யப்பட்டது.
1799 - செப்டெம்பர் 23 சித்திரவதை, காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள் முற்றாக அழிக்கப்பட்டது. இலங்கையில் சிந்தனைச் சுதந்திரம், வணக்கச் சுதந்திரம் பிரித்தானிய அரசின் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டது.
1799 - டிசம்பர் 15 சுதேசிகளுக்கான முதலாவது ஆங்கிலக் குருமடம் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்டது.
1800 - யூன் வடமாகாணத்தில் கால்நடை தொற்றுநோய் ஐந்தில் நாலு பங்கு கால் நடைகளை காவு கொண்டது.
மன்னாரில் ஆபரணங்குக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். மாந்தோட்டத்தை சேர்ந்த கலி ஒரு வைத்தியருமான குமாரசிங்கா முதலியார் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்.
1801 - வணக்கத்துக்குரிய கிறிஸ்ரியன் டேலிட் பிரித்தானிய அரசால் யாழ்ப்பாணத்திற்கான குரு முதல்வராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முதல் வில்லியம் பிரான்சிஸ்கு மனுவல் மேர்கப்பா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
1801 - செப்டம்பர் 03- அரிசி, நெல் போன்ற தானியங்களுக்கு வரி அறவிடப்பட்டது. டச்சுகாரின் காலத்தில் விளை நிலங்கள் கட்டாய கூலி வரியாக அறவிடப்பட்டது.
1802 - மார்ச் 15 இலங்கை அரச வர்த்தகமானி முதல் முதலாக பிரசுரிக்கப்பட்டது.
1802 - மார்ச் 27 அமியன்ஸ் உடன்படிக்கை இலங்கையில் உள்ள அனைத்து டச்சு உரித்துக்களும் ஆங்கிலேயரிடம் கையளிக்கப்பட்டது. நீதித்துறையில் உச்சநீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.
1802 - ஆகஸ்ட் 11 திருகோணமலையில் தொற்று நோய் தடுப்பூசி ஏற்றுதல் ஆரம்பிக்கப்பட்டது.
1802 - யாழ்ப்பாணத்தில் புரொட்டஸ்தாந்து மத விசுவாசிகளின் எண்ணிக்கை 136000 ஆக குறைந்தது.
1803 - சிலாபத்தில் முத்துகுளித்தல் நிலையம் 15500 பவுண்ஸ் லாபமீட்டியது. கண்டி ராச்சியத்தின் பின்னனியில் வன்னித் தலைவன் பண்டார வன்னியன் ஆங்கிலேயருக்கெதிராக கிளர்ச்சி செய்தான்.
1803 ஆகஸ்ட் 25 கண்டியர்கள் முல்லைத்தீவை தாக்கினர். பண்டார வன்னியன் விடத்தல் தீவை சூறையாட முயன்றான். மன்னார் தனியார் நிறுவனத்தை சேர்ந்த மேஜர் வின்சன்ட் அஅதை தடுத்து நிறத்தினார்.
1803 ஆகஸ்ட் முல்லைத்தீவை சேர்ந்த குமார சேகர முதலியாரும் வேறு சிலரும் தேசத்துரோக குற்றசாட்டில்கொலை செய்யப்பட்டனர். இலங்கை சிவில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
1803 ஒக்டோபர் 31 கப்டன் றிபேர்க் பண்டார வன்னியன் படைகளை தாக்கி பலரை கொன்றான்.
1804- ஓர் முத்துக்குளித்தல் நிலையம் 75000£ பவுண்ஸ் பணம் லாபமீட்டியது.
1804- இங்கிலாந்து மிசஷரியை சேர்ந்த மூவர் இலங்கை வந்தனர். இவர்கள் காலி,மாத்தறை,யாழ்ப்பாணம்ஆகிய இடங்களில் தங்கியிருந்து பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினர். லணக் பாலம் வூல்பெண்டால்தேவாலய்தின் போதகராக நியமிக்கப்பட்டார்.
1805 -நிதிக்குறைபாட்டால் யாழ்ப்பாணத்தில் 47 பாடசாலைகள் மூடப்பட்டன. பதினொரு முத்துக்குளித்தல் நிலையம் 35000£ பவுண்ஸ் லாபமீட்டியது.
1806- ஏப்ரல் 02 கெனரல் அலெக்சான்டர் யோன்ஸ்சன் மாகாண பிரதம நிதியரசர்ராக நியமிக்கப்பட்டார்.
1806- டச்சுக்கார்ர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து தெருக்கோடிகளிலிருந்தும் ரோமன்கத்தோலிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர்.
1806- யூலை பொலிஸ் விதானைமார் முறை முதலில் நியமிக்கப்பட்து.
1807- ஆகஸ்ட் 05-சொத்து திருமண தொடர்பான சட்டமுறைகள் தடை செய்யப்பட்டது.
1807- ஜனவரி சந்தை வரி முதன் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1808- ஜனவரி ஓர் முத்துக்குளித்தல் நிலையம் 90,000 £ பவுண்ஸ் லாபமீட்டியது.
டிசம்பர் 16 - யாழ் பேராலயத்திற்கு முன்னால் மடம் கட்டுவதற்கு அஸ்திவாரமிடப்பட்டது.
1809 மார்ச் ஒரு முத்து குளித்தல் நிலையம் 25000£ பவுண்ஸ் லாபமீட்டியது. ஜெனரல் வில்லியம் கோக் மாகாண முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1811 பெப்ரவரி 01 ஏறுமறவுயந்த மன முதலியார் காரதீவு கனபூமியின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1811-நவம்பர் ஒர் புதிய சட்ட சாசனம் வாசித்து நிறைவேற்றப்பட்டது. இதன்படி மேல் நீதிமன்றம் இரண்டுபிரிவாக்கப்பட்டு அன்று ஒர் பிரதம நிதியரசரை கொண்டதாக கொழும்பிலும் இரண்டாவதுயாழ்ப்பாணப்படினத்தில் ஒர் உதவி நிதியரசரை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. முடிக்குரியஇலங்கையின் அனைத்து குடிமக்களும் பொதுவாக குற்றச்செயல்கள் யூரிமார் முறையில் வழக்கு விசாரனைகள்முடித்துவைக்கப்பட்டன.
நெடுந்தீவுக்கென எட்வேர்ட் றோன்ன் என்பவர் அத்தியட்சகராக நியமிக்கபட்டனர்.
1812 மார்ச் 10- மேதகுரு லெப் ஜெனரல் ரொபேட் பிறவுன்நிக் இலங்கையில் பிரித்தானிய குடியேற்றகமாண்டராகவும்,கவர்னராகவும் நியமனம் பெற்று வந்தடைந்தார்.
1812 மார்ச் 16 யூரிமார் முறையில் தீர்ப்பு வழங்கும் புதிய சட்ட சாசனம் இன்று வாசிக்கப்பட்டு பிரகடணப்பட்டது.
ஆகஸ்ட் 01 புதிய பைபிள் சபை ஆரம்பிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 11 அரச தாவரவியல் பூங்கா இன்று ஆரம்பிக்கப்பட்டது. உருளைக்கிழங்கு முதன் முறையாக சாகுபடிசெய்யப்பட்டது.
வெளிநாடுகளுக்கான அமெரிக்கன் மிசன் பாதிரிமார் முதன் முறையாக இந்தியாவுக்கு அனுப்பட்டனர்.
1813 பெப்ரவரி 10 வெல்லலியன் சபையை சேர்ந்த பாதிரியாரின் மனைவி திருமதி எல்ட் காலமாணார்.
அமெரிக்க சபையை சேர்ந்த வண திரு நியுவெல் இலங்கை வந்தடைந்தார்.
ஆகஸட் 10- சந்தை வரி நிறுதரதப்பட்டது.
1814-யூன் 29 வெஸ்லியன் சபையை சேர்ந்த அறுவர் இலங்கை வந்தடைந்தனர்.
நவம்பர் 05 பயங கரமான சூறாவளி இலங்கையின் வடக்கு,வடமேற்கு பகுதிகளை தாக்கியது. யாழ்ப்பாணம்மன்னார்,விடத்தல்தீவு ஆகியவை பெரும் சேதமடைந்தன.
1815 எதிர்மனசிங்கி முதலியார், கண்டி ராச்சியத்தை கைப்பற்றுவதற்கு கேணல் கார்டிக்கு உதவினார். இவர்யாழ்ப்பாணத்தில் செல்வாக்குள்ளவராயிருந்தார்.
1815 மார்ச் கூப்பர் என்பவர் யாழ்ப்பாணத்திற்கு கலக்டர் ஆக நியமிக்கப்பட்டார். டச்சு செப்பு நாணயமானசல்லி புழக்கத்தில் விடப்பட்டது. 12 சல்லி ஒரு பணம் ஆகும்.
1815 ஆவனி - அமெரிக்கன் மிசனை சேர்ந்த ஐந்து போதகர்கள் பொஸ்டன் நகரில் இருந்து இலங்கை நோக்கி வந்தனர். ஜோன் வில்கின் என்னும் வர்த்தகர் ஐந்து வருடங்களிற்கு கடலட்டை ஏற்றுமதி செய்யும் அனுமதி பெற்றார்.
1816 மார்ச் 23- அமெரிக்கன் சபையை சேர்ந்தவர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
ஏப்ரல்- அமெரிக்க மிசனரிமார் ஆலயதிருச்சபை கூட்டத்தை நடத்தினர். அமெரிக்க சபையை சேர்ந்த வண. லோறன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். அவரை தொடர்ந்து வண. பெஞ்சயின்,டானியல், மெய்ச் ஆகியோர் வந்தனர்.
1817-வண. லோறன் தெல்லிப்பளையில் ஓர் வைத்திய சாலையை நிறுவினார்.
1816 ஆகஸ்ட் 12- கரையோரப்பகுதிகளில் அடிமைகள் வைத்திருப்பவர்கள் மொத்தம் 763 பேர், இத்திகதியிலிருந்து அடிமைகளுக்கு பிறக்கும் பிள்ளைகள் அனைவரும் சுதந்திரமானவர்கள் எனபிரகடனப்படுத்தப்படது. லோறன்,புலவர் ஆகிய இருவரும் தெல்லிப்பளையில் வசிந்தனர்.
கேஸ்ரிங்ஸ், புலவர் ஆகிய இருவரும் மட்டக்களப்பிற்கு சென்றனர். லோறன்,ஜேம்ஸ் நிச்சட் ஆகிய இருவரும்ஐரோப்பிய மருத்துவத்தை ஆரம்பித்தனர்.
1817 செப்டொம்பர்- இலங்கையின் பிரதம நிதியரசர் சேர் அலெக்சான்டர் யோன்சன் கேட்டுக்கொண்டபடிபைபிளைப் போதிப்பதற்கு ஆலயசபை ஒத்துக்கொண்டது.
டிசம்பர் 20- நான்கு மிசனரிமார் சாமுவேல் லம்பிறிக்,பெஞ்சயின வாட் ரொபட் மேஜர்,யோசப் நைற் இலங்கைசெல்ல கப்பல் ஏறினார்.
1818- இலங்கையில் இருந்து முதலாவது தேங்காய் எண்ணை சரக்கு ஐக்கிய ராச்சியத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டது.
யூன்11- நான்கு மிசனரி மாரும் இலங்கை வந்து சேர்ந்தனர்.
யூலை - ஆலயசபை யாழப்பாணத்தில் நிறுவப்பட்டது. வணக். யோசப் நைற் யாழ்ப்பாணம் வந்து நல்லூரில்உள்ள அவரது வாசல் தலத்தில் குடியேறினார்.
ஆவணி - அமெரிக்க திருச்சபையை சேர்ந்த வண.இலங்கையில் வாரன் கேப் ரவுனில் மரணமடைந்தார்.
1819- அமெரிக்க மிசனைச்சேர்ந்த வைத்தியர் ஸ்குடர், வைத்திய திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில்உள்ள இளை ஓர்களுக்கு மேலைத்தேய வைத்தியத்தை பயிற்ற ஆரம்பித்தார்.
1820- டச்சுக்கார்ர்களின் அடக்கு முறை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மடுக்கோயிலுக்கு யாத்திரை செய்வதுபிரபலமாயிற்று. திருக்குடும்ப கன்னியர்ஸ்திரிகள்.அமைப்பு போர் தோலிப் ஆரம்பிக்கப்பட்டது.
1820-வணக். மீரோன் வின்ஸ்லோ,கென்றி வூட்லார்ட் ஆகியோருடன் செல்லி லிடியா வூட்வார்ட்,செல்வி கரியற்ஸ்குடன் ஆகியோர் யாழ்ப்பாணதிலுள்ள அமெரிக்க மிசனுடன் வந்து இனைந்து கொண்டனர்.
1820 பெப்ரவரி 21-லெப். ஜெனரல் சேர் ரொபேட் றிக் பிரவுன்றிக் இங்கிலாந்திற்கு திரும்பி செல்ல சேர் எட்வாட்பார்ணல், அவருடைய இடத்திற்கு லெப்ரின்ற் கவர்னர் ஆக நியமிக்கப்பட்டார்.
1821 -இறந்த சங்குகன் யாழ்ப்பாண கடலேரியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1822 பெப் 02 -லெப் ஜெனரல் சேர் எட்வார்ட் பேஜன் காலனி அரசை பொறுப்பேற்றார்.
பெப்ரவரி 06- சார்ல்ஸ் கொட் யாழ்ப்பாண கலக்டர் ஆக நியமிக்கப்பட்டார்.ஏப்ரல் 23- யோர்டன் லொட்ச், நாதானியல் நைல்ஸ்,சார்ல்ஸ் கொச்,ஏனேலிமுஸ் எபனேசர் போர்ட்டர்,ஆகியோர்பரிட்சையின் பின் சுதேச அமெரிக்க போதகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
1822 யூலை -மேஜர் ஜெனரல் சேர் ஜெம்ஸ் கம்ப்பெல் இலங்கை ராணுவத்தில்அதிகாரியாக இணையதிருமலைக்கு வந்தார்.
நவம்பர்06 - லெப். ஜெனரல் சேர் எட்வாட் பேச் கொழும்பிலிருந்து கல்கத்தா செல்ல மேஜர் கெனரல் சேர்ஜேம்ஸ் கம்ப்பெல்,அவருடைய இடத்திற்கு லெப்.கவர்னர் ஆக நியமிக்கப்பட்டார்.
வண. ஜோசப் நைற் நல்லூரில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தார்.
1823 -வெஸ்லியன் மிசனுக்கென ஓர் புது ஆலயம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.
யூலை 22- மட்டக்களப்பில் டாக்டர் டானியல் வாரண் தலைமையில் ஓர் குருமடம் திரக்கப்பட்டது.
யூலை -திரு மோய்ஸ் மடுவில் ஓர் சிற்றாலயத்தை அமைத்தார்.
ஆலய சபையை சேர்ந்த அட்லி போதகர் வண.நைற் போதகருடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இணைத்துகொண்டார்.
1824 ஜனவரி 18- லெப் கெர்னல் சேர் எட்வர்ட் பார்ணல் இலங்கையில் கவர்னராகவும்,இராணுவ தளபதியாகவும்நியமிக்கப்பட்டார்.
திருதிருமதி வின்ஸ் லோ தம்பதிகளின் தலைமையில் பெண்களுக்கென ஓர் மத்திய பாடசாலைஅமெரிக்கமிசனால் ஆரம்பிக்கப்பட்டது.
1824- யாழ்ப்பாணத்தில் வசித்த போர்த்துகேய டச்சு தலைமுறைகளின் நலன்களை கவனித்த வெஸ்லியன் மிசனை சேர்ந்த வண.ஸ்குவான்ஸ் சுகயீனம் காரணமாக காலி சென்றார்.வண. காவலர் அவருடைய இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
மார்ச்-1 பேர்சிலர் அக்வன்ட் டைக் யாழ்ப்பாணத்தின் உதவி கலக்டராக நியமிக்கப்பட்டார்.
புத்தூர் கிணற்றிலிருந்து விவசாயத்திற்கென நீரை வெளியேற்ற வலிமை மிக்க நீர் இயந்திரங்கள் பரிட்சிக்கப்பட்டன.
யூலை 23- சாமுவேல் என்பவர் நேர்த்திக்கடனாக ஓர் வெள்ளி வாளும் கொழுக்கி பூட்டும் செய்து கிளாலியிலுள்ள புனித ஜேம்ஸ் தேவாலயத்திற்கு வழங்கினார். நல்லூர் ஆங்கிலப்பாடசாலையின் நிர்வாகியான வண. அட்லி பாதிரியாரிடம் இவர் வேலை பார்த்தார்.
1825 பெப்ரவரி 01- பி.ஏ.டைக் என்பவர் யாழ்ப்பாண மாஜிஸ்ரேட் ஆகவும்இ வரிவசூலிப்பவராகவும் நியமிக்கப்பட்டார்.
யூலை 01- பவுண்ஸ்இசிலிங்ஸ்இபென்ஸ்இ பார்த்திங்ஸ் எனப்படும் ஆங்கிலேய ஐரிஷ் நாணயங்கள் தீவின் உத்தியோக பூர்வமானஇ சட்டநாணயங்களாக நடைமுறைக்கு வந்தன. அனைத்து வரவு செலவுகளும் இந்த நாணய அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
டொன் டியாகோ வர்ண சூரிய அரச நிலாயித முதலியார் அவரது 92 வயதில் மரண மடைந்தார்.இவர் ஓர் பண்டிதர் ஆவார் பண்டிதராக அமெரிக்க மிசனில் வேலை செய்த மத்தியு பிலிப்ஸ் என்பவர் ஆலய சபையை சேர்ந்த வண. நைற் போதகரின் கீழ் வேதம் கற்பிக்க நியமிக்கப்பட்டார்.
டிசம்பர் 30- பிறவுன் றிக் கலக்டர் ஆக நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாண பிரதேச சமய சபை நிறுவப்பட்டது.
எஸ் சுப்பிரமணிய ஐயர் வழக்கறிஞர் ஆக யாழ்ப்பாணத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார்.