Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வடக்கு,கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 25 பிரதான நீர்த்தேக்கங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 24 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் வெளியேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

 நிலவும் வானிலையைப் பொறுத்து, எதிர்காலத்தில் மழையின் தீவிரத்தைப் பொறுத்து நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், அனைத்து ஆறுகளின் நீர்மட்டமும் தற்போது அபாய அளவை விடக் குறைவாக இருப்பதாகவும், அனைத்து நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80% முதல் 90% வரை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
73 பிரதான நீர்த்தேக்கங்களில் 25 பிரதான நீர்த்தேக்கங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 24 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அல்லது வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 
அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய நீர்த்தேக்கங்களில் மதகுகள் மற்றும் வெளியேற்றங்கள் திறக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
 
கிழக்கு மாகாணத்தில் உள்ள சேனநாயக்க சமுத்திரம் தற்போது குறைந்த நீர் மட்டத்தில் உள்ளது, ஆனால் அந்த மாவட்டத்தில் உள்ள சில நீர்த்தேக்கங்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாதுரு ஓயா மற்றும் முந்தானை ஆறுகளில் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது என்றும், மதுரு ஓயா வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், யான் ஓயா மற்றும் பதவிய நீர்த்தேக்கங்களின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேலும் தெரிவித்துள்ளது