தடாலடியாக இறங்கிய சீனா! ஆடிப்போன அமெரிக்கா! அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கு சீனா தடை விதிக்க தயாராகியுள்ளது.
2024ம் ஆண்டு மட்டும் சீனாவுக்கு சுமார் 4.5 மெட்ரிக் டன் கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இறைச்சி ஏற்றுமதியாகியிருக்கிறது.

அமெரிக்கா வேளாண் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கு சீனா தடை விதிக்க தயாராகியுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவின் வேளாண் துறையில் பலத்த அடி விழும் என்று சொல்லப்படுகிறது. வரி விவகாரத்தை மனதில் வைத்துதான் சீனா இப்படியான முடிவை நோக்கி சென்றிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சீனாவுக்கு சுமார் 4.5 மெட்ரிக் டன் கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இறைச்சி ஏற்றுமதியாகியிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 720 மில்லியன் அமெரிக்க டாலராகும். இப்படி இருக்கையில் அமெரிக்க இறைச்சிகளில் சால்மொனெல்லா எனப்படும் பாக்டீரியா கிருமி இருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. எனவே அமெரிக்க இறைச்சி இறக்குமதியை கட்டுப்படுத்தவும், தேவையெனில் முழுமையாக ரத்து செய்யவும் சீனா தயாராகியிருக்கிறது.
இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட இறைச்சி, முட்டையை உண்ணும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு என பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதை சீரியஸான விஷயமாக சீனா கையில எடுக்க இருக்கிறது. ஒருவேளை சீனா அமெரிக்காவின் இறைச்சியை தடை செய்தால் 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்க விவசாயிகள் இழப்பை சந்திப்பார்கள். எனவே அமெரிக்கா இந்த மேட்டரில் கொஞ்சம் கலக்கமடைந்திருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
வரி விஷயம் காரணமாத்தான் சீனா பழிவாங்குவதாக அமெரிக்க ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். சீனாவிலிருந்து தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஒரு காலத்தில் அமெரிக்காவில் குவிந்திருந்தன. ஆனால், டிரம்ப் இந்த பொருட்களை தடை செய்தது மட்டுமின்றி அதற்காக கூடுதலாக வரியை போட்டார். இப்படியாக வரி போர் தொடங்கியது. பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரி போட, இப்போது சீன 125 சதவிகிதமும், அமெரிக்கா 145 சதவிகிதமும் பரஸ்பர வரியை போட்டிருக்கின்றன.
மற்ற நாடுகளுக்கும் டிரம்ப் வரியை போட்டிருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சீனா இந்த வெயிட்டிங் லிஸ்டில் இல்லை. எனவே சீனா கடுப்படைந்திருக்கிறது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்க சீனா தயாரிகியிருக்கிறது. எனவே தான் தற்போது உணவு விஷயத்தில் அந்நாடு கையை வைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.