Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கதறிய அழுத மக்களை வாரி அரவனைத்த பிரதி அமைச்சர்!

,

சீரற்ற வானிலையால் மலையகத்தில் பாதிக்கப்பட்ட நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் உள்ள மக்களை பார்வையிடுவதற்காக நேற்று (04) பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு சென்றிருந்தார். 
கந்தப்பளை பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் உறவுகளை இழந்த குடும்பங்களையும் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்கள் எங்களையும் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர். 

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 
இதேவேளை கந்தப்பளை பகுதியில் மாத்திரம் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் அறியகிடைத்தது. மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் பாதிக்கபாபட்டு வருகின்றார்கள். 

இவர்களுக்கான பாதுகாப்பான ஒரு இடத்தை பெற்றுக் கொடுப்பது தான் எமது முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கிறது. 
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பான பகுதியில் இவர்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் எமது அரசாங்கத்தின் ஊடாக கட்டாயம் அமைத்து கொடுக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தினை முன்வைத்து அனர்த்த அரசியலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். 

இறந்து கிடக்கும் உடல்கள் மேல் ஏரி அரசியல் பேசுகிறார்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற என்னம் அவர்களுக்கு கிடையாது இந்த சந்தர்ப்பத்தில் இதனை வைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறார்கள் என தெரிவித்தார்.