Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு: தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு?

.

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்திக்கு , ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடதுசாரி குழுவினர் என அவர்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு மேலதிகமாக, சட்டத்தரணி கீர்த்தி உடவத்த, தேசிய அமைப்பாளர் கே.பி. குணவர்தன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பிரிவினரிடமிருந்து ஆதரவை பெறுவதா இல்லையா என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் எதுவித பதிலும் வழங்கவில்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது.