Breaking News
திலக் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு!
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
திலக் ராஜபக்ஷ தனது உயர் கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.
அம்பகவெல்ல பிராந்திய வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தலைவராகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.