Breaking News
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து ; ஐந்து பேர் காயம்.
.
கண்டி – திகன வீதியில் கெங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (10) திங்கட்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெங்கல்ல பிரதேசத்தில் வீதியிலுள்ள பாரிய மரமொன்று முறிந்து வீழ்வதை கண்ட பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாரதி விபத்தை தவிர்ப்பதற்கு முயன்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த சுவரிலும் தொலைதொடர்பு கோபுரத்திலும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனிற்குள் இரண்டு ஆசியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்துள்ளனர்.
விபத்தின் போது வேன் சாரதி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் வீதியிலிருந்த தொலைதொடர்பு கோபுரம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.