Breaking News
யாழில் பலத்த மழை, காற்றினால் ஆலயத்தின் கூரை முற்றாக சேதம்!
.
யாழில் பலத்த மழை, காற்றினால் ஆலயத்தின் கூரை முற்றாக சேதம்!
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (18) மழையுடன் வீசிய காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக சேதமாகியுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயமொன்றின் கூரையே மழை மற்றும் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளது.
இருப்பினும், இதனால் யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.