யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-10.
.
கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியார், வல்வெட்டித்துறை புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமி ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் சபாபதி முதலியார் (இ. 1884), மீனாட்சிப்பிள்ளை ஆகியோர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளமையிலேயே ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றிருந்தார். 1841 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார்.செமினறியில் தனது ஆசிரியராக இருந்த வைமன் என்பவரின் பெயரைத் தனது முதல் பெயராக சேர்த்துக் கொண்டார். இதனால் இவர் வைமன் கு. கதிரவேற்பிள்ளை என அழைக்கப்பட்டார்.
1885 யூலை 21 - களிப்பூட்டும் நிகழ்ச்சிக்காரரான அமெரிக்கர் வாட்சன் யாழ்ப்பாணத்தில் ஓர் நிகழ்ச்சி நடத்தினார்.
யூலை - யாழ்ப்பாணக் கல்விப்பரிசோதகர் கண்டிக்கு மாற்றலாகிச் சென்றார்.
ஆகஸட் - கிளாலியில் உள்ள சென் ஜேம்ஸ் தேவாலயம் வழக்கறிஞர் ஜேம்ஸ் நிக்கொலாவினால் திருத்தப்பட்டது.
செப்ரம்பர் 8 - அமெரிக்க மிசனைச் சேர்ந்த செல்வி லெய்த்ச் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று உடுவில் பெண்கள் விடுதிக்கு 5000 ரூபா பணம் சேகரித்தார்.
நவம்பர் 14 - வடக்கிற்கு றெயில்வே போக்கு வரத்து விஸ்தரிப்பதற்கு யாழ்ப்பாண நீதிமன்ற வளவில் செல்வாக்குள்ளவர்களின் மிகப் பெரிய கூட்டம் நடைபெற்றது.
நவம்பர் - வலிகாமம் வடக்கு மணியகாரர் அம்பலவாண முதலியார் மரணமடைந்தார்.
டிசம்பர் - பச்சிலைப்பள்ளியில் முதன்முதலாக தென்னை பெருந்தோட்ட பயிர்ச் செய்கையை ஆரம்பித்த திரு டன்லொப்பிற்கு உதவியாக, வந்திணைந்த மேற்பார்வையாளர் பற்றர்சன் யாழ்ப்பாணத்தில் மரணமானார். தி. கதிரித்தம்பி வலிகாமத்திற்கான மணியகாரர் ஆக நியமிக்கப்பட்டார்.
1886 பெப்ரவரி - சட்ட சபையில் முகமதியர்களின் திருமணப் பதிவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்க் கவிஞர்களின் கவிதை தொகுப்பு 'பாவலர் சரித்திர தீபகம்' வெளியிடப்பட்டது.
1886 மார்ச் - கரையூர் ' றெக்ளமேசன்' சுவர் வரைக்கும் மண் நிரப்பி அருகே வீதியும் அமைக்கப்பட்டது. ஊர்காவற்துறையில் தானியக் களஞ்சியம் கட்டப்பட்டது.
ஏப்ரல் - கதிரவேற்பிள்ளை அவர்களால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தொகுதி கலைச் சுவடிகளும் மொழிபெயர்ப்பும் லண்டனில் நடந்த இந்திய காலனித்துவ கண் காட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
1886 யூலை 5 - திரு இருதய சகோரத்துவ அமைப்பின் பொதுக்கூட்டம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் ஆசிரியர் டாக்டர் ஏ இலாட்ஸ் 'ஆன்மாவின் அழிவில்லாநிலை' பற்றி கட்டுரை படித்தார்.
யூலை - இலங்கை ஆலய பிரச்சார சபையின் ஸ்தாபகர் டபிள்யு யூக்லி மரணமானார். 50 வருடங்களுக்கு மேலாக இவர் ஆலய பிரச்சார சபையில் சேவை செய்தார்.
ஆகஸ்ட்7 கொழும்பு ஆலய பங்கு தந்தை வண பிதா ஜோசப் புலாசோ, இருதய வலி காரணமாக திடீர் மரணமானார். இவர் முன்னர் யாழ்ப்பாணத்தில் கடமை புரிந்தார். அத்துடன் மிகவும் உயர்ந்த புத்தி ஜீவியுமாவார்.
செப்டெம்பர் 1 - தனது சுற்று நிருபத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கையைக் கத்தோலிக்க சபையின் தனித்தீவான மாகாணமாக அறிவித்தார். இதன்மூலம் கொழும்பு அதிமேற்றிராணியார் பிரிவாகவும், கண்டியும் யாழ்ப்பாணமும் மேற்றிராணியார் பிரிவாகவும் பிரகடனப்படுத்தப்பட்டன.
1887 சனவரி 6 - புனித லூசியாஸ் தேவாலயத்தில் வைத்து டாக்டர் அக்ரியார்டி கொழும்பு அதி மேற்றிராணியாரையும், யாழ்ப்பாணம் கண்டி ஆகியவற்றின் மேற்றிராணிமார்களையும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சனவரி19 - காங்கேசன்துறையில் மிகவும் துன்பமான சூழலில் வணபிதா மேர்பி மரணமடைந்தார்.
பெப்ரவரி 1 - தீவுப் பகுதிக்கென தனியான ஆலயப்பாங்கு உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
மார்ச் - யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 10ரூபாய் சில்லறை மாற்றுவதற்கு 10 வீதம் கழிவு கொடுக்கவேண்டியதாயிற்று.
மார்ச் 28 - சுவாம்பிள்ளை, பிலிப் ஆகியோரின் தந்தையும், வழக்கறிஞருமான பஸ்டியாம்பிள்ளை மரணமானார். இவர் வெலிச்சோர்பிள்ளையின் மகனாவார்.
ஏப்ரல் 2 - சிலாவத்துறையில் உள்ள முத்துக்குளிப்பு நிலையத்தில் 800 பேர் வேலை செய்தனர்.
ஏப்ரல் 12 - யாழ் நீரேரியில் அரியாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடையில் மாலை 5.30.மணிக்கு பெரிய நீர் எழுச்சி உண்டாயிற்று இருப்பினும் 6 நிமிசத்தில் அடங்கி போயிற்று.
மே - சிலாவத்துறை முத்துக்குளிப்பு நிலையம் 3,96,095 ரூபா பணமீட்டியது.
யூன் 14 - இலங்கை பெண்கள் வழங்கிய 17000 ரூபா பணத்துடன் கோர்டோன் சீமாட்டி, மகாராணியின், யூபிலியில் பங்கெடுக்க லண்டன் சென்றார்.
1887 யூன் 28 - இலங்கைத் தீவின் அனைத்து நகரங்களிலும் மகாராணியின் யூபிலி சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண திறந்தவெளி அரங்கில் ஏராளமான மக்கள் ஒன்று கூடினர். யாழ் அரச அதிபர் ரூவைனம் மகாராணியின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாசித்தார். பின் வரும் நிகழ்ச்சிகள் நடந்தேறின. காலை 9 மணிக்கு புறக்கோட்டையில் உள்ள இங்கிலாந்து சபையின், சிறிய கோவிலில் சமய வழிபாடு, 11 மணிக்கு ஏழைகளுக்கு அன்னதானம் அரசு வழங்கல், 7மணிக்கு வெளி அரங்கில் சாதனைகள் வாசிப்பு, நாடகம், இசை நிகழ்ச்சி.
யூலை 29 - விக்டோரியா பெண்கள் இல்லத்திற்கான அத்திவாரம் மாலை 4 மணிக்கு இடப்பட்டது. மாலை 7.30 க்கு வாண வேடிக்கை, உள்ளுர் சங்கீதம், பிடில் வாசிப்பு, அரிச்சந்திர விவாகம், நாடகம் ஆகியன இடம்பெற்றன.
1888 யூலை 28 - மேன்மை தங்கிய சேர் ஆர்தர் கமில்ரன் கோர்டன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
திருவாங்கூர் சமஸ்தான மேல் நீதிமன்ற நீதிபதி கபிரியேல் சீமோன் அரியநாயகம்பிள்ளை திருவனந்தபுரத்தில் மரணமானார். மன்னாரில் ஆட்டிசியன் குழாய்க் கிணறுகள் தோண்டுதல் ஆரம்பிக்கப்பட்டது.
ஆகஸ்ட் - யாழ்ப்பாணத்திற்கு றெயில்சேவை போக்குவரத்தை நீட்டுவதற்காக யாழ்ப்பாண மக்கள் கவர்னருக்கு கோண்டுகோள் அனுப்பி வைத்தனர்.
நவம்பர் 8 - பாடசாலைகள் உப பரிசோதகர் திரு. பிறெட்றிக் மரணமானார்.
நவம்பர் -1887-1888 - உப்பளக் குத்தகையை 50,000ரூபா செலுத்தி திரு எஸ்மனுவேல்பிள்ளை அவர்கள் எடுத்துக் கொண்டார்.
டிசம்பர் -யாழ்ப்பாண கத்தோலிக்க வாசிகசாலை நிர்மாணத்திற்காக சென் பற்றிக்ஸ் மண்டபத்தில் கலைநிகழ்ச்சி நடாத்தப்பட்டது. வில்லியம் நெவின்ஸ் என்பவர் சுதேச உயர் பாடசாலை ஆரம்பித்தார்.
1888 சனவரி 29 - வண்ணார்பண்ணையில் வீக்டோரியா வாசிகசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பெப்ரவரி12 -பிரிட்டிஸ் இந்திய நீராவி போக்கு வரத்து கப்பல் முகவர் சு.பி பொன்னையாபிள்ளை தனது 25வது திருமணநாள் நிகழ்வாக சே.சு கார்டியன் பத்திரிகையை ஆரம்பித்தார்.
மன்னாரில் உள்ள முத்துக்குளித்தல் நிலையம் 80,000ரூபா பணம் ஈட்டியது.
மார்ச் -இலங்கை தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஜே. எச் மார்ட்டின் ஏற்றார்.
ஏப்ரல் 19 -1888-1889 சாராய குத்தகையை திரு சேதுபதி சூசைப்பிள்ளை 37,000ரூபாய் கட்டி எடுத்துக்கொண்டார்.
ஏப்ரல்30 -பிறவுகள் குடியிருப்பு, சென் ஜோன்ஸ் கோவிலுக்கான அத்திவாரத்தை யாழ் ஆயர் இட்டார். முன்னர் இடிக்கப்பட்ட கோயிலிருந்த அதே இடத்தில் இக் கோயில் கட்டப்பட்டது.
மே 2 -யாழ்ப்பாணத்தில் பருத்தி பயிரிடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை பெரும் .தோட்ட பயிரிடுவோர் சங்க தலைவர் சா. மொறிசன் நடாத்தினார்.
மே4 - ஜோன் றொய்லி குருவானவர் மரணமானார். அரச விறகு இலாகாவைச் சேர்ந்த ஜோசப் கபிரியேல் செருபிம் காலமானார்.
கொட்டடியில் மாடுகளுக்கு கோமாரி நோய் வந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது.
யாழ் மாவட்ட நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் சென் ஜோன் புவிராஜசிங்கி முதலியார் மரணமானார். இவர்1871ல் கவர்னர் சோ கெர்கியூலிஸ் றொபின்சனால் கவர்ணர் தொடர்பு முதலியாராக நியமிக்கப்பட்டார்.
மே24 -மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு யாழ்ப்பாண கச்சேரி சிறாப்பர் மு. மொகிடன் மரணமானார். யாழ்ப்பாண பிரசித்த நொத்தாரிசு ஏபிரகாம் திசவீரசிங்கி நீர்க்கோப்பு ஏற்பட்டு மரணமானார்.
யூன் 12 -யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில், யாழ்ப்பாணத்திற்கு ரயில் போக்கு வரத்தை நீட்டிடக் கோரும் தீர்மானம் நிறைவேறியது. கனகராயன்குளம் நில அளவு வேலைகள் ஆரம்பித்தன.
யூலை23 -யாழ்ப்பாணம் மீதான போர்த்துக்கல் அரசரின் உரிமை முடிவிற்கு வந்தது என அறிவி;க்கப்பட்டது.
1888 யூன்24 -ஜே மக்ரின் முன்னாள் 'தபாலதிபர் யாழ்ப்பாணம்' ஸ்கொட்லாந்தில் மரணமானார்.
யூன் 29 -3வது இந்திய தேசிய காங்கிரஸ் பற்றிய தனதுரையை திரு நெவின்ஸ் செல்லத்துரைபிள்ளை விக்ரோறியா வாசிகசாலை மண்டபத்தில் நிகழ்த்தினார்.
யூலை -யாழ்ப்பாண பருத்தி கம்பனி தனது செயல்வடிவம் பற்றிய விளம்பரத்தை வெளியிட்டது.
யூலை24 -முன்னாள் சுங்க அதிகாரியும், தென்னை பெருந்தோட்ட துரையுமான பிரிட்டிஸ் போரிட்டிமன் மரணமானார்.
ஆகஸ்ட் -யாழ்ப்பாணத்திற்கான விசா அதிகாரியாக திரு ருவைன்காம் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் நியமிக்கப்பட்டார்.
1888 செப்டம்பர் 5 -யாழ் கத்தோலிக்க வாசிகசாலை நிதிக்காக தேங்காய் உடைக்கும் போட்டி நடைபெற்றது. மனுவேல்பிள்ளை, பேதுருப்பிள்ளை ஆகியோர் குழுக்களுக்கு தலைமை தாங்கினர் சுமார் 500 ரூபா பணம் இதனால் ஈட்டப்பட்டது.
செப்டம்பர் -கோவாவைச் சேர்ந்த குருவானவர் கொழும்பு வந்து சேர்ந்தார்
செப்டம்பர்29 -செரன்டிப் கப்பல் இலங்கையில் நடத்திய தபால் சேவையை லேடி கோர்டன் கப்பல் பொறுப்பேற்று நடாத்துவதற்கு கொழும்பு வந்தது.
ஒக்டோபர் -'லேடி கோர்டன் கப்பல் முதன்முறையாக இலங்கையை சுற்றி வந்தது.
நவம்பர் -யாழ்ப்பாண உப்பளம் 1888-1889ம் ஆண்டிற்கான குத்தகைப் பணம் 52900 ரூபாயைக் கட்டி திரு மனுவேற்பிள்ளை எடுத்துக்கொண்டார்.
டிசம்பர்7 – -'ஏழைகளின் சிறு சகோதரிகள்' அமைப்பைச் சேர்ந்த அறுவர் கொழும்பு வந்தடைந்தனர். டிசம்பர்13 - யாழ்ப்பாணத்தில் வீசிய சூறாவளி
1889சனவரி 4 -லெப்டினன்
சனவரி19 -கவர்னர் எட்வேட் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
சனவரி 24 -வழக்கறிஞர்கள் காசிப்பிள்ளையும், கதிரவேற்பிள்ளையும் இணைந்து பங்காளிகளாக வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தனர்.
சனவரி 28 -வணபிதா பி.ஓ பிளனகன் மரணமடைந்தார். குருமார் மத்தியில் சிறந்த பிரசங்கியாகவும் பேச்சாற்றல் மிக்கவராகவும் இவர் திகழ்ந்தார்.
திறமையான, பூரணமான மிசனரிக்குச் சான்றாக இவர் வாழ்ந்தார். (குறிப்பு 169)
சனவரி -500,000 ரூபா முதலீட்டில் இலங்கையில் ஓர் புகையிலை கம்பனி உருவாக்கப்பட்டது.
1889 பெப்ரவி 4 -'விக்டோரியா பெண்கள் வயோதிபர் இல்லம்' நிதி உதவிக்காக, யாழ்ப்பாணம் ராணி மாளிகையில் அழகுப் பொருட்கள் விற்பனை நடாத்தப்பட்டது. (குறிப்பு 431)
பெப்ரவரி8 -இலங்கை தேசபக்தன் பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியரும், திறமையான எழுத்தாளருமான சொலமன் ஜோன்பிள்ளை காலமானார். (குறிப்பு 170)
பெப்ரவரி17 வண ஓ பிளைகனை தொடர்ந்து வண பிதா மெயரி கொழும்புத்துறை அனாதை இல்லத்திற்கு நிர்வாகியானார்.
கெபப்ரவரி21 -சில்லாலை சின்னத்தம்பி வைத்தியர் காலமானார். இவர் மிகவும் பிரசித்தி பெற்ற உள்ளுர் வைத்தியராவார். (குறிப்பு 171)
மார்ச் 13 -யாழ்ப்பாண ஆலய சபையைச் சேர்ந்த வண எட்வேட் கிறிபித்மூல் வயிற்றோட்டம் காரணமாக மரணமானார். கொழும்பு தமிழ் பிரிவைச் சேர்ந்த வண பிக்போட் அவருடைய இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
மார்ச் 16 -யாழ்ப்பாணம் சென் மார்ட்டின் குருமடத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய சகோதரர்கள் பூலோகசிங்கம், கிறிசோஸ்ரம,; ஜோசப், ஜோன் பகமுனை ஆகிய நால்வரும் யாழ் பேராலயத்தில் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். (குறிப்பு 172)
மார்ச் -அன்னை அள்ளுங்கள் ஒப்பாரி என்னும் கவிதை தொகுப்பு சென் ஜோசப் அச்சக பிரதம அச்சிடுபவரால் வெளியிடப்பட்டது. (குறிப்பு 175)
மார்ச்18 -யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியரும் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவருமான திரு வில்லியம் நெறின்ஸ் காலமானார். (குறிப்பு 173)
மார்ச்19 -சென் மார்ட்டிஎன் குருமட புதிய கட்டிடம் ஆசிர்வதிக்கப்பட்டது. (குறிப்பு 348)
ஏப்ரல் -யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களிலும் சாராயக்கடைகள், (1888-1890) இரண்டு ஆண்டுகளுக்கு டொன் கென்றிக் அப்புகாமியால் முறையே 41000ரூபா, 15000 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டன.
மே5 - -வழக்கறிஞர் அருளம்பலம் காலமானார்.
மே7 - இத்தாலிய போர்களில் பங்கு பற்றி, 3 'கிறிமீயா' பதக்கங்களைப் பெற்ற வண பிதா ஜோன் எவிடியுஸ் வொர்டென் அமல உற்பவ மாதா சபையைச் சேர்ந்தவர், காலமானார்.
மே15 -திரு இருதய ஆண்டவர் சபை, இரண்டாவது நூற்றாண்டு நிறைவு யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பெரும் பவனி நடந்தது.
மே24 -மாட்சிமை தங்கிய ராணி விக்டோரியாவின் 70 ஆவது பிறந்ததின விழாவையொட்டி கண்டியில் நடந்த தர்பாரில் பதவி உயர்வு பெற்ற கனவான்கள் ....!!
கவர்னர்கள் மன்ற ஆறுமுகம் இடந்தால் சிங்கி முதலியார், குருநாதர் முதலியார்கள் ஸ்ரோங் குலதுங்க அரசக்கோன் ஜோசப் கென்றி ஹலொக், சரவணமுத்து முருகேசபிள்ளை பேரின்பநாயகமுதலியார்,இலங்கநாயகர் முதலியார்.
யூன் -'றோயல் சொசைட்டி' இலங்கை அமைப்பிற்கு ஒரு பெண் தெரிவு செய்யப்பட்டார்.
யூன்2 -இங்கிலாந்தில் திரு. ஜே. எஸ். போக் காலமானார். (குறிப்பு 440)
1889 யூன் 3 -திரு இருதய சகோதர அமைப்பின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்றது இளைஞர்களின் கல்விக்கு மதரீதியான பயிற்சி அவசியம் என்ற தலைப்பில் வண பிதா டுன் ஓர் உரையாற்றினார்.
யூலை யாழ் மாவட்டத்தில் கொலராவால் 376 பேர் பாதிக்கப்பட்டார்கள். இதில் 247 பேர் மரணமானார்கள்.
யூலை24 -யாழ்ப்பாண அரச களஞ்சிய காப்பாளர் திரு. மயில்வாகனம் மரணமானார்.
ஆகஸ்ட்5 -யாழ்ப்பாணத்திற்கு ரயில்வே சேவையை நீட்டும்படி கோரும் பொதுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
செப்டம்பர் -57 ஆடி நீள திமிங்கிலம் பேசாலைக்கும் தலைமன்னாருக்குமிடையில் கரை ஒதுங்கியது.
செப்டம்பர் -திருவாங்கூர் ஓய்வு பெற்ற நீதிபதி ரி. பி. செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாண இந்து சமூகத்தின் பகுதியாக 'இந்து ஓர்கன்' என்னும் பத்திரிகையை ஆரம்பித்தார்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -