Breaking News
கடல் மீன்களின் விலைகள் அதிகரிப்பு!
.
நாட்டின் கடற்பரப்பைச்சூழ நிலவிய சீரற்ற வானிலையால் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் லின்னா மீன் 2200 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டதாக அதன் தலைவர் ஜெயசிறி விக்கிரமாராச்சி குறிப்பிட்டார்.
ஒரு கிலோகிராம் தோரா மீன் 2500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.