Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர்களின் வாக்குகளைப் பிரித்து மாற்றினத்தவர்கள் ஆசனங்களைப் பெற சுயேட்சை குழுக்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன

.

சுயேட்சை குழுக்கள் இம்முறை பல ஆயிரக்கணக்கான நிதிகளை செலவிட்டு தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷின் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுன்ற வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு இங்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலானது வட கிழக்குக்கு ஒரு முக்கியமான தேர்தலாக காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள் இம்முறை களமிறங்கப்பட்டுள்ளன. அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சியில் முதன் முறையாக ஒரு சிங்கள இனத்தவர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னணிகளை நோக்கும்போது சுயேட்சைகள் தாங்கள் வாக்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழினத்துக்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை போட்டியிடுகின்றார்கள்.

மாவட்டத்திலுள்ள மக்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை தந்து இம்முறை தேர்தலில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.