Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

”மக்களின் மனங்களை வெல்வதில் அரசியல்வாதிகள் தோற்றுவிட்டனர்”

.

காணி உறுதிகளை வழங்கி, அரிசி விநியோகம் செய்து மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயல் என தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய நாமல் உயன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துரைத்த வனவாசி ராகுல தேரர்; ”இந்த நாட்டின் அரசியலை அவதானிக்கும் போது மிகவும் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதியை வங்கித் திருடன் என பலவாறு விமர்சித்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஒருவரே இந்த நாட்டை வழிநடத்தக்கூடியவர் என கூறுகின்றனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டுக்கு கேடு விளைவிப்பதாக நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு சட்டமூலத்திற்கும் எதிராக கையை உயர்த்தினார்கள்.

அதிகாரத்தை காப்பாத்துவதற்காகவே அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். உண்மை என்னவெனில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 50 வீத அதிகாரத்தை எவராலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், குறித்த 225 பேரில் 150 பேர் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதனால்தான் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களையும் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்குப் பார்க்கிறார்கள்.

கோழிகளை விநியோகித்து, நிலப்பத்திரம் வழங்கி, அரிசி விநியோகம் செய்து மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால், அது அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயல்.

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை வெல்வதில் அரசியல்வாதிகள் வெற்றிபெறவில்லை. இந்த நாட்டில் எந்த அரசியல்வாதியாலும் இதை செய்ய முடியவில்லை.

எனவே, வாக்களிப்பின் போது மக்களின் தீர்மானத்தை எதிர்பார்க்கமுடியும். ஆகவே, இவர்களை எல்லாம் பயனற்ற மனிதர்கள் என்றே கூறவிரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.