Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது!

.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கானைச் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி ஆதரவாளர்கள் பேரணி நடத்துவதற்கு முன்னர், தலைநகர் இஸ்லாமாபாத்தில் முடக்கநிலை அமலில் இருந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குமேல் சிறையிலிருக்கும் திரு கான் மீது 150க்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், அவர் புகழ் மங்கவில்லை.

அந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று திரு கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) கூறுகிறது.

இவ்வேளையில், ஞாயிற்றுக்கிழமை (24) கானின் ஆதரவாளர்கள் ஏறக்குறைய 4,000 பேர் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் மாநிலப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். 

அவர்களில் ஐவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று தெரிகிறது.

சனிக்கிழமையிலிருந்தே கப்பல் கொள்கலன்களைப் பயன்படுத்திக் காவல்துறையினர் இஸ்லாமாபாத்தை முடக்கியுள்ளனர். 

பிடிஐ கட்சியினர் கோட்டையாகக் கருதப்படும் இடங்களை இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் முக்கியச் சாலைகளும் நெடுஞ்சாலைகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  கான், அவரது மனைவி புஷ்ரா பீபீ, முன்னாள் அதிபர் டாக்டர் அரிஃப் அல்வி உள்ளிட்ட பிடிஐ கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மீது நவம்பர் 24ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் புதிய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் அந்த வழக்குப் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.