'அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான பரத நாட்டியப் போட்டி- 2024'
.
"கல்வியமைச்சின் அழகியல் கிளையின் தேசிய மட்டப் போட்டியான 'அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான பரத நாட்டியப் போட்டி- 2024'
இப்போடியில் சங்கானையைச் சேர்ந்த நடன ஆசிரியர் நிசாந்தினியின் நடன அமைப்பில் பங்கேற்ற படைப்பு முதலிடம் பெற்றிருக்கிறது.
நடனத்திற்கு 'நாளை நமதே' எனும் பேசுபொருளிலான பாடலை நான் எழுதியிருந்தேன்.
புத்தாக்க நடனத்திற்கான
தலைப்பு: நாளை நமதே (முதலாமிடம்)
நடன நெறியாள்கை: ஆசிரியர் நிசாந்தினி ஐங்கரன்
பாடசாலை : சுழிபுரம் விக்டோரியா கல்லூரி
தாயகக் கலைஞர்களின் கலைப்படைப்புகளிற்குப் பங்களிப்பது மகிழ்ச்சிக்குரியது.
கடந்த ஆண்டும் 'போதை ஒழிப்பு' பேசுபோருளில் நான் எழுதிய பாடலுக்கான நடனம் மாகாண மற்றும் தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.
நடனக் கலைஞர்களுக்கும்இ இசைக்கலைஞர்கள்இ பாடகர்களுக்கும் நடன ஆசிரியர் நிசாந்தினி அவர்களுக்கும் வாழ்த்துகள்!
ழூழூ
அந்தப் பாடலிலிருந்து சில வரிகள் :
இன்றைச் சரி செய்
நாளை நமதாகும்
இதயச் சிறை வெல்
நாளை உனதாகும்
உயிரின் கதை செய்
கலையும் வசமாகும்
துணிவைத் துணை கொள்
தடைகள் பொடியாகும்
------
நம்பிக்கை விதைகள்
முளைக்கின்றன
நாளும் வானம் அழகாய் தானே விடிகிறது
ஒற்றை ஜன்னல் தான் எத்தனை
காட்சிகள் விரிக்கின்றது
------
பார்வை ஒளியினில்
பறவை வெளியினில்
பயணங்கள் நிகழ்த்து
இளமை நதியினில்
புதுமை ஊற்றினில்
வாழ்வினை உயர்த்து